தவறு செய்தால் பணிநீக்கம் - அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..

ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் பணி நியமனம் மற்றும் பணி மாறுதல்களை வெளிப்படையாக கையாண்டு மக்களிடம் நன்மதிப்பு பெற வேண்டும்.

Continues below advertisement

அமைச்சர்கள் தங்களது பணியில் தவறு செய்தால் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிவிப்பில், ‘பல எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் போது உங்களுக்கு அமைச்சராக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த விபரங்களை முழுமையாக அறிந்து வைத்து நிர்வாகத்தை நடத்த வேண்டும். ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் பணி நியமனம் மற்றும் பணி மாறுதல்களை வெளிப்படையாக கையாண்டு மக்களிடம் நன்மதிப்பு பெற வேண்டும். காவல்துறையையோ மற்ற அதிகாரிகளையோ தங்களது தேவைக்காகப் பயன்படுத்தக்கூடாது. 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் தற்போது மக்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டும். இதில் தவறிழைக்கும் நிலையில் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்’ என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Also Read:அதிமுக எம்.பிக்கள் வைத்திலிங்கம் ,கே.பி. முனுசாமி ராஜினாமா..!

Continues below advertisement
Sponsored Links by Taboola