உங்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நமது திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து இன்னும் பல புதிய திட்டங்களைக் கொண்டு வரவுள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நலத்திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்றதும் மக்களுக்கான சமூகநலத் திட்டங்களைச் செம்மைப்படுத்தும் ஆய்வுப் பணிகள் தொடங்கியது.
உங்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நமது திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து இன்னும் பல புதிய திட்டங்களைக் கொண்டுவரவுள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நமது எண்ணங்களோடு, மாவட்ட ஆட்சியர்களின் உள்ளீடுகளையும் பெற்றுக் கொண்டோம். தமிழ்நாடு சிறக்க எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல்:
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனால் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக எந்தவொரு புதுவித அறிவிப்பும் வெளியிடக் கூடாது என நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது தேர்தல் முடிவு வெளியாகிவிட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் விலக்கி கொள்ளப்பட்டன.
இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டுவது தொடர்பாகவும். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் குறித்தும், வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் மழைக்கால முன்னெச்சரிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றும், அந்த பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.