விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். விழுப்புரத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லை தொடக்கத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை வரவேற்றனர். இதை தொடர்ந்து திண்டிவனம்,விக்கிரவாண்டி,விழுப்புரம், விழுப்புரம் நான்கு முனை சாந்திப்பு உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.
முதல்வர் திடீர் ஆய்வு:-
விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் களஆய்விற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டிவனம் வரும் வழியில் உள்ள ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
முதல்வர் ஆய்வு கூட்டம் :-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்றும் (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர், இன்று சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகை தருகிறார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் 3 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் , துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்து சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கஉள்ளார்.
மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு:-
நாளை காலை 10 மணிக்கு 3 மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிவதோடு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்.