தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்குமென்றால், புகழ்ச்சிகளையும் பாராட்டுகளையும் புறம்தள்ளிவிட்டு, அவமானங்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கைமீது விவாதம் நடைபெற்றது. கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 


இந்தநிலையில், பல்வேறு துறைகள் சார்பில் சட்டபேரவையில் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடையே விவாதம் நடைபெற்றது. அதன்பிறகு விதியின் 110 ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். அப்பொழுது பேசிய அவர், ஏழரை கோடி மக்களின் மனதை பிரதிபலிக்கும் விதமாக நீட் தேர்வு விலக்கு கோரும் சட்டமுன்வடிவு கிண்டி ஆளுநர் மாளிகையில் 210 நாட்களாக முடங்கி கிடக்கிறது. 






நூற்றாண்டு கண்ட சட்டபேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த நீட் தேர்வு விலக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் கவனிப்பார் யாருமின்றி கிடக்கிறது. அதே ஆளுநர் மாளிகையில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட தேநீர் விருந்தில் கலந்து கொள்வது என்பது ஒட்டு மொத்த தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும். சட்டமன்ற மாண்பினை மேலும் சிதைப்பதாக இருந்ததால் அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆளுநருடன் எந்த முரண்பாடும் இல்லை. 


தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்க கூடிய பாராட்டை விட தமிழ்நாட்டுக்கு கிடைக்க கூடிய நன்மையும் பலனுமே முக்கியமானது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்காதது என்பது தமிழ்நாடு மக்களை அவமதிக்க கூடிய செயல் என்று தெரிவித்துள்ளார். 






தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா கிடப்பில் கிடப்பது குறித்து, தேவைப்பட்டால் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண