இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் கார் விபத்தில் மரணமடைந்தார்.அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஷில்லாங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக டேபிள் டென்னிஸ் அணியில் இடம்பெற்ற விஸ்வா தீனதயாளன் உள்ளிட்ட 3 பேர் அசாம் மாநில கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் சென்றுள்ளனர். அப்போது, ஷாங்பங்க்ளா என்ற இடம் அருகே, வீரர்கள் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி மோதியுள்ளது. இதில் தமிழக வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஸ்வா தீனதயாளனின் உடல் இன்று காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் இளம் வீரரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்துள்ளனர். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்,
எங்கள் இளம், நம்பிக்கைக்குரிய டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளனின் மறைவு இதயத்தை கிழிக்கிறது. அகால மரணம் பற்றி கேள்விப்பட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியில் உள்ளேன். அவர் ஒரு லெஜண்ட்-மேக்கிங், அவர் மிக விரைவில் எங்களை விட்டு பிரிந்தது எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு சகோதரத்துவத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.