அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக ஆட்சியில் நிறுத்தியது தான் திமுகவின் இரண்டு ஆண்டு கால சாதனைகள். திமுக ஆட்சி எப்போது செல்லும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று சேலத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.


இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், "திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா, கத்திபாரா மேம்பாலம், செம்மொழி பூங்கா, வள்ளுவர் கோட்டம் போன்றவைகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டன.


பாலங்கள், கால்வாய்கள், சாலைகள் என நாளைய மக்கள் தொகையை கணக்கிட்டு அரசு செயல்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையின் தேவைகளை தீர்த்து வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. கருணாநிதியின் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால், மெட்ரோ திட்டப் பணியால் பாதிக்கப்பட்ட சில சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.