ரேசன் கடை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 28% ஆக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என  முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


அரசு ரேசன் கடைகளில் வேலை செய்யும் விற்பனையாளர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு வழங்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு அறிவிப்பு மூலம் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2852 கட்டுநர்கள் பயன்பெற இருக்கிறார்கள். கூடுதல் அகவிலைப்படி அளிப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.73 கோடி செலவாகும். 


கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ரேசன் கடை ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி அளிக்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டதை போல தங்களுக்கும் கூடுதலாக 14% அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் என ரேசன் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, ரேசன் கடை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 1.1.2022 முதல் 28% ஆக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என  முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண