முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படங்களை நூல் சேலையில் நெய்து பரமக்குடி நெசவாளர்கள் அசத்தியுள்ளனர். 


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர்.  அரசு ஊழியர்கள் வாரத்தில் இரு தினங்கள் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை வரவேற்கும் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எமனேஸ்வரத்தை சேர்ந்த நெசவாளர் சரவணன் என்பவர் டிசைனர் சீனிவாசன் உதவியுடன் நூல் சேலையில் 3டி முறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படங்களை நெய்து சாதனை படைத்துள்ளனர்.




தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் முதன்முதலில் கையெழுத்திட்ட உருவம் பொறித்த சேலை மிகவும் தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள கருணாநிதி அணிந்துள்ள கண் கண்ணாடி பார்ப்பவர்கள் எத்திசையில் திரும்பினாலும் அவரை உற்று நோக்குவது போல் 3டி வடிவில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.


நெசவாளர்கள் பெரும்பாலும் பட்டு சேலையில் தான் புகைப்படத்துடன் கூடிய சேலைகளை தயாரிக்கின்றனர். ஒரு மாற்றத்திற்காக, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முதலமைச்சரின் புகைப்படம் பொறித்த சேலை தயாரித்து பரமக்குடி நெசவாளர்கள் அசத்தியுள்ளனர். 


பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் முன்னிலையில் இந்தச் சேலை அறிமுகப்படுத்தப்பட்டது. மகாகவி பாரதியார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உருவம் பொறித்த சேலைகள் செய்யப்பட்ட நிலையில் மூன்றாவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தினை சேலையில் நெய்து பரமக்குடி நெசவாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.


ராமநாதபுரத்தில் வழிப்பறி நடப்பதாக வெளியான வீடியோ-மாற்றி பேசி வீடியோவை வெளியிட்ட போலீஸ்


”வெட்கமின்றி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்பட வேண்டும்” - மதுரை ஐகோர்ட்!