உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை என்றும் திரு என்று மரியாதை கொடுத்து தான் பேரவையில் பேசப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.


விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி.” அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் போட்டியைக் காண பாஸ் வழங்கப்பட்டது. தற்போது, தி.மு.க. ஆட்சியிலும் 400 பாஸ் வழங்கப்பட்டது. ஆனால், எங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாஸ் வழங்க விளையாட்டுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துதர வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தார். 


எஸ்.பி. வேலுமணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,” ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவது பி.சி.சி.ஐ. அது யாரென்றால், உங்களின் நெருங்கிய நண்பரான அமித்ஷாவின் பையன் ஜெய்ஷாதான் தலைவர். நாங்கள் சொன்னால் அவர் கேட்க மாட்டார். நீங்கள் சொன்னால் கேட்பார். நீங்கள் அவரிடம் பேசி அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஐந்து டிக்கெட் கொடுத்தால் போதும். நாங்கள் காசு கொடுத்துக் கூட வாங்கிக் கொள்கிறோம். இல்லை என்றால் நீங்கள் வேறு ஏதாவது கணக்கில் சேர்த்து விடுவீர்கள்” என பதிலளித்தார். 


இன்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று முன் தினம் ஐ.பி.எல் டிக்கெட் குறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பெயர் இடம் பெற்றுள்ளது. அதை நீக்க வேண்டும் என கோரினார்.


அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதை ஏன் நீக்க வேண்டும். அதில் என்ன தவறு உள்ளது. திரு அமித்ஷா என தான் பேசியுள்ளார். அது என்ன தகாத வார்த்தையா என்றும் தவறு இருந்தால் நானே நீக்க சொல்வேன் எனவும் கூறினார்.


அமித்ஷா பெயர் அவைக்குறிப்பில் இருந்து நீக்காததை கண்டித்து பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


வெளிநடப்பு செய்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், அமித்ஷா மற்றும் அவர் மகன் குறித்து  கிண்டல் கேலியுடன் உதயநிதி பேசியுள்ளார் என்றார். அவரை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், அமைச்சர் உதயநிதி செய்யும் தவறுகள் முதலமைச்சர் கண்ணில் தெரியவில்லை. அதை நியாயப்படுத்துகிறார் எனத் தெரிவித்தார்.


NCF 2023 Draft: மாணவர்களுக்கு வேதங்கள், புராணங்கள் தெரிந்தால் மதிப்பெண்கள்: தேசிய பாடத்திட்ட வரைவு சொல்வது என்ன?


காட்டு யானைகள் நடமாட்டம் ; கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை