கடலூர் மாவட்டம்  சிதம்பரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக  நடராஜர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஆண்டுகளில் தேவாரம், திருவாசகம் பாடி சிவனை வழிபடுவதை சிவனடியார்கள் வழக்கமாக கொண்டு வந்தனர். இந்நிலையில்,  தீடசிதர்கள் தடை விதித்ததன் காரணமாக  கடந்த 8 ஆண்டு காலமாக  கனகசபை என்று அழைக்கப்படும் பொன்னம்பலமேடை ஏரி சிவனடியார்கள் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு தீட்சிதர்கள் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. 




Vismaya case: கேரளாவை அதிர வைத்த விஸ்மயா தற்கொலை வழக்கு! கணவர் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு!!


அதைத் தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏரி தேவாரம் பாடாமல் வெளியே நின்று தேவாரம், திருவாசகம் பாடி சிவனடியார்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், சிதம்பரம் கோயிலில் மூலவரான நடராஜருக்கு அருகில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது தொன்று தொட்டு வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் குறைந்த பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.




Actress malavika mohanan: மார்பகம் குறித்து படுமோசமாக கேள்விகேட்ட இணையவாசி.. பளீரென பதிலடி கொடுத்த மாளவிகா!


இதையடுத்து, சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் அரசு ஆணையை  செயல்படுத்தினர்.




ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை... கைலாசா பணிகளை சிஷ்யர்கள் கவனிப்பார்கள்...’ அதிர்ச்சி தரும் நித்யானந்தா!


அதனை அடுத்து இன்று தெய்வத்தமிழ் பேரவை அமைப்பு தலைவர் தஞ்சை மணியரசன் தலைமையில்  50-க்கும் மேற்பட்டோர் சிவனடியார்களுடன் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை புரிந்தனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடராஜர் கோயிலில் உள்ளே உள்ள கனகசபை என்று அழைக்கப்படும் பொன்னம்பலமேடை ஏரி தேவாரம் திருவாசகம் பாடினர்.