தனது மார்பகம் குறித்து கேள்வி கேட்டவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். அவரின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன்பின்னர் தளபதி விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் ஒரு முன்னணி நடிகையானார். சமீபத்தில் தனுஷின் ‘மாறன்’ படத்தில் நடித்தார். அது ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. மோசமான விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக அந்தப் படத்தில் மாளவிகாவின் நடிப்பை நெட்டிசங்கள் ட்ரோல் செய்தனர்.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், விதவிதமான போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அத்துடன் ரசிகர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவார். சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் கூலாக பதிலளித்தார். அதில், மாளவிகாவின் மார்பகம் குறித்து அவரிடம் கேட்டார். அதற்கு அவர், “சமூக ஊடகங்களில் சில ஆண்களின் தைரியமும், அடாவடித்தனமும் அதிகமாக இருக்கிறது. அதை கண்டு நான் கூட திகைப்புடன் இருக்கிறேன்” என்று பதிலளித்தார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முன்னதாக, இதே கலந்துரையாடலில் நெட்டிசன் ஒருவர், ‘மாறன்’ படத்தில் தனுஷ் உடன் பெட்ரூம் சீன் நடிக்கும் எடுக்கும்போது எத்தனை டேக் எடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா, “இந்தக் கேள்வியை பார்க்கும்போது உங்கள் மண்டைக்குள் இருக்கும் மோசமான எண்ணம்தான் தெரியவருகிறது” காட்டமாக கூறினார். அந்தப் பதிவும் வைரலானது.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாகவும், நெட்டிசன்களின் கொச்சையான கேள்விகளுக்கும் பதிலளிக்கும், மாளவிகா தற்போது பாலிவுட் நடிகர்களான சித்தந்த் சதுர்வேதி மற்றும் ராகவ் ஜூயல் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் 'யுத்ரா' என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்