செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் இன்று சென்னையில் தொடங்க உள்ளது. இந்த போட்டித்தொடரை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலமாக சென்னை வருகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரை தமிழக அரசு தீவிரமாக விளம்பரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, போட்டி நடைபெறும் சென்னையை அடுத்த மாமல்லபுரத்திலும், சென்னையிலும் பல்வேறு இடங்களிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்கள், பதாகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடமும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக அவரது நினைவிடம் முழுவதும் சதுரங்க போட்டியில் இடம்பெறும் கருப்பு, வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


சமூக வலைதளங்களில் தற்போது கருணாநிதியின் இந்த நினைவிட புகைப்படம் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, செஸ் ஒலிம்பியாட்டை பிரபலப்படுத்தும் விதமாக நேப்பியர் பாலம் முழுவதும் சதுரங்க போட்டிகள் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கருணாநிதி நினைவிடமும் சதுரங்க போட்டியின் கருப்பு, வெள்ளை காய்கள் இடம்பெறும் சதுரங்க வடிவில் அலங்கரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


இன்று தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகின் 187 நாடுகளில் இருந்து மொத்தம் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தங்குமிடம், உணவு வசதிகளை தமிழ்நாடு அரசு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இந்த போட்டியை காண்பதற்காக உலகெங்கிலும் இருந்து செஸ் ரசிகர்களும் வருகை புரிய உள்ளதால் சென்னையில் போட்டி நிறைவு பெறும் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை பாதுகாப்பை தீவிரமாக செயல்படுத்த தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Chess Olympiad Food : 77 மெனு கார்டுகள்..! 700-க்கும் மேற்பட்ட உணவுகள்..! வேளா வேளைக்கு வித்தியாசமான உணவு..! செஸ் திருவிழாவில் ஓர் உணவுத்திருவிழா...!


மேலும் படிக்க : Chess Olympiad 2022 : வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட்...! தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண