நாட்டிலேயே முதன்முறையாக அதிகவேக உணவு டெலிவரியை சொமாட்டோ (Zomato) நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைவர் திபீந்தர் கோயல் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இனி உணவு 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த குறிப்பிட்ட நேர டார்கெட் என்பது உணவு டெலிவரி செய்பவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை கொடுக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவு என்ற புது அம்சத்தால் உணவு டெலிவரி செய்பவர்களும் பறபறப்பார்கள். உணவகத்தில் தாமதம் செய்யப்படுவது, போக்குவரத்து நெரிசல், சரியான முகவரியை கண்டுபிடிப்பது போன்ற பல சிக்கல்களை கடந்து 10 நிமிடத்துக்குள் சாப்பாடு கொடுப்பது சாத்தியமா என்பதை அந்நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில், சொமாட்டோ திட்டத்தால் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படலாம் என்பதால் சென்னை காவல்துறை அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 





சொமாட்டோவின் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளித்திருக்கிறார் ஜொமாட்டோ நிறுவனர் திபீந்தர் கோயல். இது குறித்து நேற்று காலை அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் “குறிப்பிட்ட சில பகுதிகளிலும், குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே 10 நிமிடத்தில் டெலிவரி செய்ய இருக்கின்றோம். 10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்யவில்லை என்றால் டெலிவரி பார்ட்னர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. சரியான நேரத்தில் டெலிவரி செய்பவர்களுக்கு கூடுதல் சம்பளம் தரப்பட மாட்டாது” என தெரிவித்திருக்கிறார்.






மேலும், 10 நிமிடத்தில் டெலிவரி செய்யப்படுவது முற்றிலும் ஆரோக்கியமானது, எளிதாக சமைக்கக்கூடிய உணவுகளை மட்டும் டெலிவரி செய்ய இருப்பதாக உறுதி அளித்திருக்கிறார் தீபிந்தர் கோயல்.




மேலும் படிக்க: 18 நாளில் முடிந்த 100வது நாள் படம்.. சிகரெட் கேப்ல எல்லாம் யோசிப்பார்.. மணிவண்ணன் சீக்ரெட்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண