Chennai Traffic Diversion: செஸ் ஒலிம்பியாட்டிற்காக பிரதமர் மோடி வருகை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வர உள்ளார்.

Continues below advertisement

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இந்தச் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி சென்னை வர உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. 

Continues below advertisement

இதன் ஒரு பகுதியாக சென்னையில் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “4ஆவது உலகச் சதுரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை பெரியமேடு இராஜா முத்தைய்யா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 28.07.2022 மாலை நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர்,  இந்தியப் பிரதமர், தமிழ் நாடு ஆளுநர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள். எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் 28.07.2022 நண்பகல் முதல் இரவு 21.00 மணிவரையில் முத்தைய்யாச் சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தேவை ஏற்படின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையச் சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது. அதுபோன்றே ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து ராஜா முத்தையாச் சாலையை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.


வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டிச் சாலைச்சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து  சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, கொத்தளம் நோக்கித் திருப்பி விடப்படும்.

இந்த வாகனங்கள் வியாசர்பாடி வால்டாக்ஸ் சாலை மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கொண்ட சாலை வழித்தடங்களை தவிர்த்து பிற வழித்தடங்களைப் பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement