வட தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.


 






திருப்பத்தூர், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 12 மாவட்டங்களில் நானை கனமழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


நீலகரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணித்துள்ளது. தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி, 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.


 






நீலகரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூரில் செப்டம்பர் 5ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சியில் செப்டம்பர் 5ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால், குறைந்த கால அளவில் அதிக மழை பெய்வது தொடர் கதையாகி உள்ளது. இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.