நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளத்தை சேர்ந்தவர் இசக்கி(32) - எஸ்தர் மரியா தம்பதியினர். இசக்கி கூலித்தொழில் செய்து வருகிறார். இதில் வரும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்த முடியாத சூழலில் தனது குடும்ப செலவுக்காக கடந்த ஆண்டு கீழதுவரைகுளத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். மேலும் அவர் வாங்கிய கடனுக்காக மாதம் தோறும் 2,500 ரூபாய் வட்டியும் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாதம் வட்டித்தொகையை இசக்கி செலுத்த முடியாத சூழலில் இருந்துள்ளார்..  வட்டி பணம் வராத நிலையில் கடன் கொடுத்த அந்த பெண் இசக்கி வீட்டிற்கு சென்று, அவரது மனைவி எஸ்தர் மரியாவிடம் வட்டி கேட்டு அவதூறாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த எஸ்தர் மரியா இதுபற்றி தனது கணவர் இசக்கியிடம் கூறியுள்ளார். 


தகவலறிந்த இசக்கி அந்த பெண்ணிடம் இது பற்றி கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் வட்டி தரவில்லை என்றால், உன் மனைவியை என் கணவருடன் அனுப்பு என்று ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இசக்கி களக்காடு காவல் நிலையத்த்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே தனது மனைவி அசிங்கமாக பேசியதை எண்ணி மனமுடைந்து காணப்பட்ட இசக்கி நேற்று இரவில் வீட்டில் யாருக்கும் தெரியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த இசக்கியின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இசக்கிக்கு 4 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடன் தகராறில் பெண் ஒருவர் தனது மனைவி குறித்து ஆபாசமாக பேசியதால் மனம் உடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண