வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 6 ம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. அதிலும், சென்னை மாநகராட்சியில் பெய்த கனமழை சதவீதம் 70 என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
வெள்ள பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், மத்திய அரசிடம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாயை கடந்த அதிமுக அரசு வாங்கி என்ன செய்தார்கள். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த நேரத்தில் முறையாகப் பணிகள் நடைபெறவில்லை என்றார்.
மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளதாகவும், முறையாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதிலும் முறைகேடு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலைமை சரிசெய்த பிறகு, தவறு செய்தவர்கள்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், சென்னை அய்யம்பாக்கத்தை சேர்ந்த காசி மாயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து ஸ்மார்ட் சுட்டிக்காக தமிழக அரசு நிதி பெற்றது குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், தமிழ்நாட்டில் உள்ள 14 மாநகராட்சிக்காக கடந்த 2015 முதல் தற்போது வரை நிதி வாங்கிய நிலையில், அதில் 10 மாநகராட்சிக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அந்த மாநகராட்சிகளுக்கும் முறையான செலவுகள் செய்யப்படவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு :
Smart city திட்டத்தில் முறைகேடு புகார் குறித்த தகவலுக்கு மலுப்பலான பதில் அளித்துள்ளனர் என்று காசி மாயன் தெரிவித்துள்ளார்.
1].Smart City திட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய் .772/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
2].Smart City திட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.379/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
3].Smart City திட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.579/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
4].Smart City திட்டத்தில் சேலம் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.479/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
5].Smart City திட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.386/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
6].Smart City திட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.386/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
7].Smart City திட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.386/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
8].Smart City திட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.373.81/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
9].Smart City திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.379/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
10].Smart City திட்டத்தில் வேலூர் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.373.81/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
Smart City திட்டத்தில் 10 மாநகராட்சிக்கும் மட்டும் மொத்தம் ரூபாய்.4793.62/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இதில் மத்திய அரசு நிதி Rs.2307.63/-கோடி, மாநில அரசு நிதி Rs.2486/-கோடி.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்