சென்னையில் பெய்த மழையானது 100 செ.மீ., மழையளவைத் தாண்டவில்லை என்று வானிலை மையம் கூறிய நிலையில், அதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பரபரப்பான கருத்தை ஒன்றை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னையில் 100 செ.மீ மழை தாண்டவில்லை என்று ஐ.எம்.டி கூறும்போது, சிரபுஞ்சி அல்லது மவ்சின்ராம் உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் இல்லை என்று சொல்வது போல் இருக்கிறது. ஏனெனில் கிழக்கு காசி மலை மாவட்டத்தின் சராசரி 10000 மிமீ இல்லை என்பதால், சிரபுஞ்சி, மவ்சின்ராம் பகுதியும் அப்படியானது இல்லை என சொல்வதுபோல் உள்ளது. தரவுகள் பொய் சொல்லாது. இதை எப்படி வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்ல முடியும்’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் கனமழை குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் ஒரு மாதத்தில் 1000 மி.மீ.,அளவை கடப்பது இது 4-வது முறையாகவும், கடந்த 200 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் மட்டும் 1000 மி.மீ.,அளவை கடப்பது 3வது முறையாகவும் பதிவாகியுள்ளது. 1088 mm - நவம்பர் 1918
1078 mm - அக்டோபர் 2005
1049 mm - நவம்பர் 2015
1003 mm - நவம்பர் 2021 (27 நவம்பர் - 7.30 pm நிலவரப்படி) இது தான் இந்த ஆண்டுக்கான தீவிர கனமழையின் நிலை என்றும் கூறியிருந்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்