ஆறு மாதங்களுக்குப் பிறகு, நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று கூடியுள்ள நிலையில், சக பெண் எம்.பிக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பசிர்ரத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நுஸ்ரத் ஜகான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாராமதி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுப்ரியா சுலே, பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரனீத் கவுர், திமுகவின் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மிமி சக்கரவர்த்தி ஆகியாருடன் எடுத்த புகைப்படத்தை சசி தரூர் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " பணி செய்திட மக்களவை கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று யார் சொன்னது? இன்று, காலை ஆறு சக பெண் மக்களவை உறுப்பினர்களுடன்.... " என்று பதிவிட்டார். சசி தரூரின் இந்த ட்விட்டர் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. டிசம்பர் 23-ந் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், 19 அமர்வுகள் நடைபெறும். முதல் நாளானா இன்று மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு மக்களவையில் திரும்பப் பெற்றது.
இன்றையக் கூட்டத் தொடரில், வேளாண் பொருட்களுக்காக வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டவடிவம் கொடுக்க காங்கிரஸ், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதா தளம், டிஆர்எஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்