ஜனவரி மாதம் என்றாலே குளிர் காலம் நிலவி வருவதுதான் வழக்கம். குறிப்பாக டிசம்பர் மாதம் முடிவடைந்தவுடன் வடகிழக்கு பருவமழையானது, தமிழ்நாட்டை விட்டு விலகிவிடும். அதையடுத்து குளிர் நிலவி வருவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.


ஜனவரி மாதத்திலிருந்து தமிழ்நாட்டில் குளிர் நிலவி வருகிறது. ஊட்டி உள்ளிட்ட இடங்களில் உறைபனியும் நிலவி வந்தது. 


தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலும், காலை வேளையில் சற்று குளிர் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலை முதலே சென்னையை கார் மேகங்கள் சூழ்ந்திருந்தன. சில இடங்களில் லேசான தூரல் மழையும் பெய்தது.


குளிர்காலத்தில், திடீரென வழக்கத்துக்கு மாறாக சாரல் மழை பெய்துள்ளது, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.




                       படம்: அண்ணா சாலை






சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 20-21  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  நேற்று ( ஜனவரி 20 ) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


20.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  
நீலகிரி, கோவை மாவட்டங்களின்  மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.


21.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.






22.01.2023 மற்றும்  23.01.2023:  தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசானது    முதல்   மிதமான மழை   பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.