தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்வு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வெளியான போது தான் தன்னுடைய பழக்கம் எனவும் காயத்திரி ரகுராம் கூறிய கருத்துகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறினார். ஊடக மற்றும் பத்திரிகையாளர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறிய அண்ணாமலைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சுப்ரமணிய சுவாமியை சந்தித்து அவரிடம் பேசி நான் நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுப்பிரமணியசாமி அழிக்கக்கூடிய சான்றிதழ் தனக்கு தேவை இல்லை எனவும் அண்ணாமலை ஆவேசமாக பேசினார். ஈஷா யோகா மையத்தில் பெண் மாயம் தொடர்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறிய அண்ணாமலை ஆதார் கார்டு இருக்கும்போது மக்கள் ஐடி எதற்காக கொண்டு வர வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.
தனி நாட்டிற்கான அடைத்தலும் குறித்து திமுக கனவில் கூட இணைந்து பார்க்க கூடாது எனவும் அண்ணாமலை கூறினார். பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என அண்ணாமலை தெரிவித்தார். தமிழக அரசிடமிருந்து சில தொலைக்காட்சிகள் அதிக பணம் பெறுவதாகவும் அவ்வாறு பணம் பெறக்கூடிய தொலைக்காட்சிகளின் நிருபர்கள் தான் அதிகம் கேள்வி கேட்பதாக அண்ணாமலை கூறியதால் நிருபர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்:
அப்போது, நிருபர்களிடம் அண்ணாமலை ஒருமையில் பேசியதாக கூறி சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில்
இன்று (04-01-2023) புதன்கிழமை காலை சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை. *புதியதலைமுறை செய்தியாளர் திரு.இரா.முருகேசன், சமீபத்திய கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருந்து காணாமல் போய் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் மரணம் குறித்து எழுப்பிய கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் , கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங்கள் எந்த ஊடகம் என்று கேட்க ஆரம்பித்து செய்தியாளரின் கேள்விக்கு நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசியிருக்கிறார் அண்ணாமலை.
ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள் , எந்த ஊடகம் என்பதை கேட்பதுடன் அவர்களின் கேள்விக்கும் செய்தி சேகரிக்கும் பணி குறித்தும் அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல..இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறையை மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசியலில் வளர்ந்து வரும் திரு.அண்ணாமலை அவர்கள் ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நயத்தகு நாகரீக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும்.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.