2023ஆம் ஆண்டுக்கான சென்னை இலக்கியத் திருவிழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (ஜனவரி 6) பிரம்மாண்டமாகத் தொடங்கியது. 8ஆம் தேதி வரை இந்தத்‌ திருவிழா நடைபெற உள்ளது. 


மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் படைப்பு அரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம்,  மாணவர்களுக்கென தனி பயிலும் அரங்கம்,  சிறுவர்களுக்கு நம் இலக்கிய உலகை அறிமுகம் செய்துவைக்கும் வகையில் கதை, பாடல்‌, நாடகம்‌ வழியாக கடத்தும்‌ வகையில்‌ சிறுவர்‌ சிறுவர் இலக்கிய நிகழ்வுகள் ஆகியவை நடைபெற உள்ளன.


சிந்தனைக்கு விருந்தளிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற இருப்பதாகவும் இதில் அனைவரும்  பயன்படுத்திக்கொள்ளுமாறும் பொதுநூலக இயக்ககம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இன்று காலை 10 மணிக்கு நூலக வளாகத்தின் தரைத் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இலக்கியத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். பல்வேறு அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.


சிறப்பு ஏற்பாடுகள்


சென்னை இலக்கியத்‌ திருவிழாவினை கொண்டாடும்‌ வகையில்‌ அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம்‌ முழுவதும்‌ வண்ண விளக்குகளாலும்‌, கலை வேலைப்பாடுகளாலும்‌, ஓவியங்களாலும்‌ அலங்கரிக்கப்பட்டுள்ளது‌. நூலக வளாகத்தில்‌ அரிய பருவ இதழ்கள்‌, நூல்கள்‌, ஆவணங்களும்‌, தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள்‌ காலம்‌ முதல்‌ வெளிவந்த அரிய நாணயங்களும்‌, சென்னையின்‌ வரலாறு சார்ந்த ஒளிப்படங்களும்‌ தனித்தனியாக காட்சிப் படுத்தப்படுகின்றன. 


இலக்கியத் திருவிழா நிகழ்வுகள்‌ முழுமையும்‌ காணொளியாக பதிவு செய்யப்பட்டு அனைவரும்‌ காணும்‌ வகையில்‌ இணையத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட உள்ளது.







பேச்சாளர்கள்  மற்றும் தலைப்பு விவரம்  (06.01.2023, வெள்ளிக்கிழமை)


படைப்பு அரங்கம்



  • எஸ். ராமகிருஷ்ணன் - சென்னையும் நானும் -  நண்பகல் 12.00 - மதியம் 1.00  

  • இமையம் - கோவேறு கழுதையிலிருந்து தாலிமேல சத்தியம் வரை - மதியம் 2.00 - 3.00  

  • கண்மணி குணசேகரன் - எனது புனைவுகளில் நடுநாட்டு வாழ்வு மதியம் 3.00 - 4.00  

  • யுவன் சந்திரசேகர் - ஒரு நாவலாசிரியரின் இசை அனுபவங்கள் - மாலை 4.00 - 5.00 


பண்பாட்டு அரங்கம்


அண்ணா நூற்றாண்டு நூலகம் நிகழ்வு அரங்கம் - 8 வது தளம் 


பேச்சாளர்கள்  மற்றும் தலைப்பு விவரம்  (06.01.2023, வெள்ளிக்கிழமை)



  • ஜெ. ஜெயரஞ்சன் - திராவிடத்தின் வருகையும் சமூக மாற்றமும் - நண்பகல் 12.00 - மதியம் 1.00  

  • ராஜன்குறை - திராவிடமும் தமிழ் சினிமாவும் - மதியம் 2.00 - 3.00  

  • வீ. அரசு & க. காமராசன் - தமிழ்: மொழி – இலக்கியம் – பண்பாடு - மதியம் 3.00 - 4.00  

  • ம. ராஜேந்திரன் - கலை இலக்கியங்களில் கால இணைப்புகள் - மாலை 4.00 - 5.00 


பயிலும் அரங்கம்


அண்ணா நூற்றாண்டு நூலகம் மாநாட்டு அரங்கம் - தரைத் தளம் 
பேச்சாளர்கள்  மற்றும் தலைப்பு விவரம்  (06.01.2023, வெள்ளிக்கிழமை)



  • சமஸ் - நாளேடுகளும் மாணவர்களும் - நண்பகல் 12.00 - மதியம் 1.00  

  • அமலன் ஸ்டான்லி - அறிவியல் பார்வையில் -மதியம் 2.00 - 3.00  

  • வெற்றிமாறன் - மக்களுக்கான சினிமா - ஒரு புரிதல் - மதியம் 3.00 - 4.00 

  • சுந்தர்ராஜன் - காலநிலை மாற்றமும் தமிழ்நாடும் - மாலை 4.00 - 5.00 


குழந்தைகள் இலக்கிய அரங்கம்


அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு - முதல் தளம் 
பேச்சாளர்கள்  மற்றும் தலைப்பு விவரம்  (06.01.2023, வெள்ளிக்கிழமை)



  • அ. ஹேமாவதி - அன்றாட அறிவியல் - நண்பகல் 12.00 - மதியம் 1.00  

  • வனிதாமணி - சுவை குறையாத கதைகள் - மதியம் 2.00 - 3.00  

  • நக்கீரன் - இயற்கையிடம் கற்போம் -மதியம் 3.00 - 4.00 

  • நீதிமணி - பலூன் தாத்தாவின் பாடல்கள் - மாலை 4.00 - 5.00 

  • கலைவாணன் குழுவினர் - அப்புசாமியும் அகல்விளக்கும் - சூழலியல் விழிப்புணர்வு பொம்மலாட்டம் - மாலை 04.45 - 06.00 


நிகழ்த்து கலைகள்


அண்ணா நூற்றாண்டு நூலகம் மாநாட்டு அரங்கம்  - தரைத் தளம், மற்றும் முதல்தளம் திறந்தவெளி அரங்கம்
கலைஞர் மற்றும் தலைப்பு (06.01.2023, வெள்ளிக்கிழமை)



  • மக்களிசைப்பாடல்கள்: தண்டரை சகோதரிகள் உமா & ராஜேஸ்வரி - மாலை 05.15- 06.00 

  • மாற்று ஊடக மையம் வழங்கும் மண்ணின் கலைகள் - மாலை 06.00- 07.15 

  • பிரசன்னா ராமசாமியின்  "68,85,45 + 12 லட்சம்" - மாலை 07.30 - 09.00  


சனிக்கிழமை (07.01.2023) நிகழ்ச்சி - பேச்சாளர்கள்  மற்றும் தலைப்பு விவரம் :


படைப்பு அரங்கம்



  • சி. மோகன் - தமிழ் வெளியில் நவீன கலை -  காலை 10.00 - 11.00 

  • கரன் கார்க்கி & தமிழ்ப்பிரபா - ”சென்னை வாழ்வியல்” இலக்கியப்பார்வை - காலை 11.00 - 12.00  

  • சு. தமிழ்ச்செல்வி & இளம்பிறை - எனது படைப்புகளில் பெண்கள் -  நண்பகல் 12.00 -  மதியம் 01.00 

  • மனுஷ்யபுத்திரன், கவின் மலர்- பெருநகரமும் கவிஞனும் - மதியம் 02.00  -  03.00  

  • ஜி. குப்புசாமி & கே.வி. சைலஜா - தமிழ் வாசகப்பரப்பும்  மொழிப்பெயர்ப்பும் - மதியம் 03.00 -  04.00  

  • பாவண்ணன் & ரவி சுப்பிரமணியன் - ஆளுமைகளும் நானும் - மாலை 04.00 - 05.00 


பண்பாட்டு அரங்கம் -



  • ய. மணிகண்டன் - பாரதி காலத்து சென்னை - காலை 10.00  - 11.00  

  • மு. ராஜேந்திரன்  - காலனியமும் ஆனந்தரங்கம் பிள்ளையும் - காலை 11.00  - 12.00  

  • அ. மார்க்ஸ் - நண்பகல் 12.00  - 01.00  

  • நா. ஆண்டியப்பன், கமலாதேவி அரவிந்தன் & சூரியரத்னா - சிங்கப்பூர் இலக்கியம் - மதியம் 02.00 - 03.00  

  • ஏ.எஸ். பன்னீர்செல்வன் - Dravidian narratives: where dignity trumps humiliation - மதியம் 03.00 - 04.00  

  • அ. அருள்மொழி - பெண் ஏன் அடிமையானாள்? -  மாலை 04.00  - 05.00  


பயிலும் அரங்கம்



  • நர்த்தகி நடராஜ் - பாலின சமுத்துவம் -  மாலை 10.00 - 11.00  

  • அ. விஸ்வம் - நவீனக் கோடுகள் - காலை 11.00  -  நண்கல் 12.00 

  • அ. வெண்ணிலா - வரலாறு ஏன் படிக்க வேண்டும்? - நண்பகல் 12.00  - 01.00  

  • மிஷ்கின்  - திரைக்குப் பின்னால் இலக்கியம் - மதியம் 02.00  - 03.00  

  • யுகபாரதி & கபிலன் - இலக்கியமும் சினிமாவும் - மாலை 03.00  - 04.00  

  • ஷாஜி & கடற்கரய் - திரைப்படமும்  இசையும், தமிழ்த்திரையும் தமிழக வரலாறும் - மாலை 04.00  - 05.00  



குழந்தைகள் இலக்கிய அரங்கம்



  • ஆதி. வள்ளியப்பன் - நம்மைச் சுற்றி உயிர் உலகம் - காலை 10.00  - 11.00  

  • கோவை சதாசிவம் - காடு எனும் அற்புத உலகம் - காலை 11.15  - 12.15  

  • ஷர்மிளா தேசிங்கு - நரிக்கதையும் காக்கா பாட்டும் - நண்பகல் 12.15  - 01.15  

  • சேதுராமன் - மந்திரமா... தந்திரமா? - மதியம் 02.00  -  03.00  

  • பிரியசகி - பொம்மை சொல்லும் கதைகள் - மதியம் 03.00  - 03.30 

  • ரமணி & மீனா - சுட்டிக் கதைகள் - மாலை  04.00  - 04.30  

  • மாணவர் கலைத் திருவிழா - ஆட்டம் இசை - மாலை 04.45  - 06.00 


கலைஞர் மற்றும் தலைப்பு  (07.01.2023, சனிக்கிழமை)



  • ராப் இசை - தெருக்குரல் அறிவு - மாலை 05.15   - 06.00  

  • மரப்பாச்சி குழு வழங்கும் உள்ளுரம் - மாலை 06.15 -  07.15 

  • சென்னை கலைக்குழு வழங்கும் மகேந்திரவர்ம பல்லவனின் ' மத்த விலாசப் பிரகசனம்' - மாலை 07.30 - 09.00 


பேச்சாளர்கள் மற்றும் தலைப்பு (08.01.2023, ஞாயிற்றுக்கிழமை)


படைப்பு அரங்கம்



  • சாரு நிவேதா - கலையும் மீறலும் - காலை 10.00 - 11.00  

  • கனிமொழி கருணாநிதி MP, கவிதா முரளிதரன்  - தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம் - காலை 11.00  - 12.00  

  • யாழன் ஆதி, கண்டராதித்தன் & இளங்கோ கிருஷ்ணன் - நவீன கவிதை இவர்கள் பார்வையில் - நண்பகல் 12.00  - மதியம் 01.00 

  • தெய்வீகன், செல்வம் அருளானந்தம் & ஷோபாசக்தி - புலம் பெயர் இலக்கியங்கள் - மதியம் 02.00  - 03.00 

  • அழகிய பெரியவன், ஜே.பி. சாணக்யா, காலபைரவன் & ஆதவன் தீட்சண்யா  - தமிழ்ச் சிறுகதையில் பாராமுகங்கள் - மதியம் 03.00  - 04.00  

  • சுகிர்தராணி, ச.விஜயலட்சுமி & கனிமொழி. ஜி - தமிழ்க் கவிதைகளில் ஆண் மையப்பார்வை - மாலை 04.00 - 05.00 


பண்பாட்டு அரங்கம்



  • பாரதி கிருஷ்ணகுமார் - ஜெயகாந்தனின்  ”சென்னை” - காலை 10.00  - 11.00 

  • தமிழ்மகன் & ரெங்கையா முருகன் - வட சென்னை -  காலை 11.00  - 12.00  

  • கரு. ஆறுமுகத்தமிழன் - அறமெனப்படுவது யாதெனில் - நண்பகல் 12.00  - மதியம் 01.00 

  • ஆர். விஜயசங்கர் - தமிழ் ஊடகங்களும் கருத்தியலும் - மதியம் 02.00 - 03.00 

  • ரவிக்குமார் MP - அயோத்திதாசரின் ”சென்னை” - மதியம் 03.00  - 04.00  

  • ஆ.இரா. வேங்கடாசலபதி - 1930களில் சென்னை: கலை இலக்கியச் சூழல் - மாலை 04.00  - 05.00  


பயிலும் அரங்கம்



  • லோகமாதேவி  - சூழலியல் - ஒரு புரிதல் - காலை 10.00  - 11.00 

  • ராமு மணிவண்ணன் - கல்வியும் வாழ்க்கையும் - காலை 11.00  - மதியம் 12.00 

  • கரு. பழனியப்பன் - சமூகம் பழகு - நண்பகல் 12.00  - மதியம் 01.00   

  • முருகேசபாண்டியன் & செல்வேந்திரன் - இலக்கியங்களை கண்டடைவது எப்படி? - மதியம் 02.00  - 03.00  

  • சிறில் அலெக்ஸ் - காலனிய காலத்து இந்தியா - மதியம் 03.00  - 04.00  

  • ஆயிஷா நடராஜன் - வாசிப்பே வெல்லும் - மாலை 04.00  - 05.00 


குழந்தைகள் இலக்கிய அரங்கம்



  • கதை சொல்லி சதீஷ் - கோமாளியின் ஆஹா கதைகள் - காலை 10.00  - 11.00  

  • அறிவரசன் - மேஜிக் இல்ல... அறிவியல் தான் - காலை 11.15  - 12.15  

  • ’தெருவிளக்கு’ கோபிநாத் - கூத்து கலைஞரின் கதைகள்! - நண்பகல் 12.15 - 01.15 

  • இனியன் - உடலை உறுதியாக்கும் விளையாட்டுகள் - மதியம் 02.00  -  03.00  

  • 'வி அக்கா’ வித்யா - ஆடிப்பாட வைக்கும் வி அக்கா கதைகள் - மதியம் 03.00  - 03.30  

  • அனிதா மணிகண்டன் - முக ஓவிய கதை சொல்லல் - மாலை 04.00pm - 04.30pm 

  • காளிஸ்வரன் - கொஞ்சிப்பேசலாம் குழந்தைகளே - மாலை 05.00   - 06.00 


நிகழ்த்து கலைகள் 



  • மக்களிசை : கரிசல் கிருஷ்ணசாமி, கருணாநிதி, வசந்தி & உடுமலை  துரையரசன் - மாலை 05.15  - 06.00  

  • வெளிப்படை அரங்க இயக்கம் வழங்கும் பாரதிதாசனின் இரணியன் அல்லது இணையற்ற வீரன் - மாலை 06.30  - 08.00 


சிறப்புப் போட்டிகள்


பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்கள்‌ பங்குபெறும்‌ வகையில்‌ அவர்களுக்கு படைப்பாற்றலுடன்‌ எழுதுதல்‌, பேச்சுப் போட்டி,‌ கவிதைக்கு மெட்டமைத்தல்‌, இலக்கிய மீம்ஸ்‌, இலக்கிய சுவரொட்டிகள்‌ உருவாக்குதல்‌, நூல்‌ திறனாய்வு, கதை எழுதுதல்‌ என பல போட்டிகள்‌ நடத்தப்பட்டு பரிசுகள்‌ வழங்கப்படும்‌.



 


சென்னை இலக்கிய திருவிழாவிற்கு மக்கள்‌ அனைவரும்‌ பங்கேற்கும்‌ வகையில்‌ வானொலி, பண்பலை, செய்தி ஊடகங்கள்‌, சமூக ஊடகங்களில்‌ தொடர்‌ நிகழ்வுகள்‌ இடம்பெறும்‌. சென்னை இலக்கியத்‌ திருவிழா தமிழகத்தின்‌ கலை, பண்பாட்டு மற்றும்‌ மரபினை பிரதிபலிக்கும்‌ விழாவாக அமையும்‌.


நாள்: ஜனவரி 6-8,2023
நேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை 


இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம்,


கோட்டூர்புரம், சென்னை. 



பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணைப்பு வழியாக பதிவு செய்யவும்: 


https://forms.gle/imNVpZFEPaigwkbbA


சிறப்புப் போட்டிகள்


பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்கள்‌ பங்குபெறும்‌ வகையில்‌ அவர்களுக்கு படைப்பாற்றலுடன்‌ எழுதுதல்‌, பேச்சுப் போட்டி,‌ கவிதைக்கு மெட்டமைத்தல்‌, இலக்கிய மீம்ஸ்‌, இலக்கிய சுவரொட்டிகள்‌ உருவாக்குதல்‌, நூல்‌ திறனாய்வு, கதை எழுதுதல்‌ என பல போட்டிகள்‌ நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.