தமிழ்நாட்டில் கோடை வெயிலானது சுட்டெரித்து கொண்டிருக்கும் நிலையில் வானிலை குறித்து, வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தெரிவிக்கையில், வரும் 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் என தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இன்று முதல் மே 6 ஆம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில், இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வாய்ப்புள்ளது.
மழை:
கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி,வேலூர் ஆகிய மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. மே மாதம் 7 ஆம் முதல் நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை மழை பெய்ததையடுத்து, வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது.
அதிக வெப்பம் ஏன்?:
மேக கூட்டங்கள் குறைவாக இருக்கிற போது, காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கிற போது, வெயில்தாக்கம் நேரடியாக இருக்கிறது. ஆகையால் வெப்பம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இடத்தை பொறுத்து வெப்பநிலை மாறுபடும் சூழ்நிலை உள்ளது.