சென்னை ஐஐடியில் குரங்கு ஒன்று மானின் மீது ஏறி பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில நேரங்களில் விலங்குகள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் ரசிக்கும் படியாக இருக்கும். நம்மை அறியாமல் நம் கவனம் முழுவது அதன் செயல்களின் மீது திரும்பும். உதாரணமாக, ஒரு பூனை மதில் ஏறும்போதோ, திருட்டு தனமாக ஏதாவது ஒரு செயல்களை செல்லும்போதோ அவை அனைத்து ரசிக்கும்படியானவை.
இப்படி ஒருபுறம் இருக்க, இங்கே ஒரு குரங்கும், மானும் செய்த செயல்தான் இன்றைக்கு டாப் ட்ரெண்டிங். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு குரங்கு தனது குறும்புகளால் இணைய பக்கத்தை கவர்ந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் புள்ளிமான் மேல் ஒரு குரங்கு அமர்ந்து பயணம் செய்தது. அதை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அத பதிவில், “இந்த குரங்குகள் ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்தவை. தெளிவான அறிவாளி” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஐஐடி அதன் கிரெடிட்டை எடுக்க விடாதீர்கள். இந்த நிகழ்வு காட்டு விலங்குகளுக்கும் பொருந்தும். இரண்டு இனங்களும் அதிலிருந்து பரஸ்பர நன்மைகளைப் பெறுகின்றன. குரங்குகள் சவாரி செய்கின்றன. பதிலுக்கு அவை காட்டில் வேட்டையாடுபவர்களைப் பற்றி மான்களை எச்சரிக்கின்றன” என்றும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஹோட்டல் அறையில் தூங்கும் பெண் ஒருவரை யானை ஒன்று தன் தும்பிக்கையால் எழுப்பி விடும் காட்சி இணையவாசிகளிடையே ஹிட் அடித்தது.
யானைகளை தேசிய விலங்காகக் கொண்ட யானைகளின் தேசமான தாய்லாந்து நாட்டின் ரிசார்ட் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சாக்ஷி எனும் பெண் பகிர்ந்துள்ளார்.
யானை தன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வீடியோ பகிர்ந்துள்ள சாக்ஷி, இந்த ரிசார்ட்டில் யானைகளுக்கு உணவளித்து, அவற்றுடன் வாக்கிங் சென்று, குளிப்பாட்டி, விளையாடி என அனைத்தும் செய்து மகிழலாம் என்றும் இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.