அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவும் ரத்து, அதை உறுதிப்படுத்திய தனி நீதிபதி உத்தரவு ரத்தும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கோவிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரி நியமிக்கப்பட்ட உத்தரவும் ரத்து இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை புதிதாக விசாரணையை தொடங்கி, அனைத்து தரப்பு விளக்கத்தையும் கேட்ட பின்னர் சட்டத்திற்குட்பட்டு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு தெரிவித்துள்ளது.
சங்கங்களின் கீழ் பதிவு செய்த ஸ்ரீ ராம் சமாஜ்ஜை கோவில் என்ற வரையரைக்குள் கொண்டு வர முடியாது. ஆகம விதிகள் படி தினசரி பூகைகள் நடத்தப்படவில்லை. 2004-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்ட நிலையில், 2013ல் அதே புகார்தாரரால் அளிக்கப்பட்ட அதே புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதோஷம் மற்றும் ராம நவமி பூஜைகள் மட்டுமே அயோத்யா மண்டபத்தில் நடத்தப்படுகிறது. சிலைகளை வைத்து பக்தர்களை பூஜிக்க வைத்து தட்சணை பெறுவதை அறநிலையத்துறை நிரூபிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்