வரதட்சணை கொடுமை வழக்குகளில் ’தனியாக வாழ்கிறோம்’ என்னும் காரணத்தைக் கூறி பெற்றோர் தப்பித்துக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  குழந்தைகளை பொறுப்புள்ள குடிமக்களாக வளர்ப்பது பெற்றோரின் மிக முக்கியமான கடமை என்றும் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

வரதட்சணைக் கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவன் மற்றும் கணவனின் பெற்றோருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து  கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கணவன் தரப்பினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் மேல் முறையீடு செய்தனர். மேலும், தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்க கோரியிருந்தனர்.

Continues below advertisement

மனுவில், திருமணமான நாளிலிருந்து மகனும், மருமகளும் தனிக்குடித்தனம் அமைத்து வாழ்ந்து வந்ததாகவும், தாங்கள் தனியாகத்தான் இருந்துவந்ததாகவும் தெரிவித்தனர்.  மருமகளின் தற்கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் தெரிவித்தனர். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மகனுடன் சேர்ந்து மனுதாரர்களும்  மருமகளை துன்புறுத்தியதற்கு போதிய ஆதாரம் உள்ளதாக தெரிவித்தார்.  . 

வழக்கை விசாரித்த நீதிபதி, வரதட்சணை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். ஒருபுறம்  மகனுடன்  வசிக்கவில்லை என்று கூறி தப்பிக்கும் பெற்றோர், மகனுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை மற்றும் பணம் நகைகளை பெறுவதாகவும் தெரிவித்தார்.

மகன் மற்றும் பாதிக்கப்பட்டவருடன் வசிக்கவில்லை கூறி, பெற்றோர்கள் தப்பித்துக்கொள்வது இந்த சமூகத்திற்கு தவறான தகவலை கொண்டு செல்வதாகவும்  சுட்டிக்காட்டினார். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது, இருப்பிடம் தருவது, நல்ல கல்வியை வழங்குவது, நல்ல வேலையைப் பெற தங்கள் குழந்தையை ஊக்குவிப்பது மட்டுமல்ல,பொறுப்புள்ள குடிமகனாக வளர்க்க வேண்டியதும் பெற்றோரின் கடமை எனக் கூறிய நீதிபதி, தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து விட்டார். இந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை நீதிபதி வரும்  28-aaம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  

2012-க்கான தேசிய குற்றப்பதிவு அமைப்பின் தகவல்படி, இந்தியாவில் 8233 வரதட்சணை மரணங்கள் நடந்திருக்கின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். ஆனால், பதிவு செய்யப்படும் வழக்குகளில் 32 குற்றவாளிகளே தண்டனை பெறுகின்றனர். குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. 2012-இல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத் துக்கு 12 அல்லது 5 நிமிடத்துக்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். குடும்ப வன்முறை வழக்குகளில் 15 சதவீதம் பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 2012-இல் 110 வரதட்சணை மரணங்கள், 1965 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.