திமுக தொண்டர் நரேஷ்குமாரை அரைநிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். திருச்சியில் தங்கி காண்டோண்ட்மெண்ட் காவல்நிலையத்தில் 2 வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு


கைது..


 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது இடையூறு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் ஜெயக்குமார் இரண்டாவது வழக்கிலும் கைது செய்யப்பட்டார். தேர்தல் நடத்தை முறைகளை மீறி  சாலை மறியல் செய்ததாக 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெயக்குமார் மீண்டும் கைது செய்யப்பட்டார். 


அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் மகள் ஜெயப்பிரபா, அவரது கணவர் நவீன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக தெரிவிக்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை அடுத்து, பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.