தமிழ்நாட்டில் அந்நிய நாட்டு  மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு  அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வனப்பகுதியில் உள்ள அந்நிய நாட்டு மரக்கன்றுகளை அப்புறப்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு, நீதிபதிகள் பரத் சக்கரவர்த்தி, சதீஷ் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரணைக்கு செயதது. 




விசாரணை முடிவில்,  தமிழ்நாட்டில்  அன்னிய நாட்டு  மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க அரசே அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், அந்நிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியை தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் விசாராணை முடிவில் கூறியுள்ளனர்.