சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களாக் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி உடல் சோர்வுடனும், உடலில் சிறு சிறு காயங்களுடன் இருந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் விசாரித்துள்ளார். தன்னை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி சிறுமி அழுதுள்ளார். இதனை அடுத்து இது தொடர்பாக வடபழனி காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
பானிபூரி காதல் டூ போதை..
தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி பள்ளி அருகேயுள்ளபானிபூரி கடையில் அடிக்கடி பானிபூரி சாப்பிட்டுள்ளார். அதே கடையில் பல் மருத்துவம் படித்து வரும் 20 வயதான வசந்த் க்ரிஷ் என்ற இளைஞரும் பானிபூரி சாப்பிட்டுள்ளார். இந்த பானிபூரி கடையால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாகவும் மாறியுள்ளது. பள்ளி சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதேபோல் தான்வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். தனக்கு பழக்கமான கஞ்சா மற்றும் ஹூக்கா போன்ற போதையையும் சிறுமிக்கு கொடுத்து அவரை போதைக்கு அடிமையாக்கியுள்ளார்.
தொடர்ந்து போதைப்பொருளை கொடுத்து நாள் முழுவதும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் வசந்த். ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையான சிறுமி போதைப்பொருளுக்காக ஏங்கியுள்ளார்.தனக்கு போதை வேண்டுமென வசந்தை தொந்தரவு செய்துள்ளார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய வசந்த் தனது நான்கு நண்பர்களையும் கூட்டு சேர்த்துள்ளார். அதன்படி சினிமா துணை நடிகர் சதீஷ் (22), கல்லூரி மாணவர் விஷால் (19), பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பிரசன்னா (32) ஆகியோரும் வசந்த் வீட்டுக்கு வந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பள்ளி இல்லாத நாட்களிலும் கூட சிறுமியை வீட்டுக்கு வரவழைத்து போதையை கொடுத்து கொடுமை தொடர்ந்துள்ளது.
கைது..
சிறுமியின் பெற்றோர் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மாணவியிடம் தகவலைக் கேட்டறிந்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வசந்த் க்ரிஷ், சதீஷ், விஷால்,பிரசன்னா ஆகியோரை கூண்டோடு கைது செய்தனர். 4 பிரிவுகளில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து மாணவியின் வீடியோவும், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் போதை..
சென்னையில் பள்ளி மாணவி வரை போதைப்பொருள் ஊடுறுவியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களுக்கு போதைப்பொருள் எப்படி கிடைத்தது என்பது தொடர்பான விசாரணையையும் போலீசார் தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் புகாரளிக்கப்பட்ட சில மணி நேரங்களில் குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.