சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான செய்ற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியார்மயமாக்கும் தீர்மனத்தை வாபஸ் பெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


சென்னையில் உள்ள திடல்களை தனியாரிடம் ஒப்படைத்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.120 கட்டணம் வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளையாட்டு வீரர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.






தீர்மானம் பின்னணி என்ன?


சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடவும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்ட.வி.த் திடல், குழந்தைகளுக்கான பூங்கா உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாசர்பாடி கால்பந்து திடல்,  நேவல் மருத்துவமனை சாலை,  திரு.வி.க. நகர் கால்பந்து வளாகம் உள்ளிட்ட 9 விளையாட்டுத் திடலை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த்து.  ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகின. அப்படியிருக்கையில், ஒரு கால்பந்தாட்ட குழு (ஆறு பேர்) விளையாடுவதற்கு ஒரு மணி நேரம் கட்டணமாக ரூ.1,440 செலுத்த வேண்டியிருக்கும். இது இஞைர்களின் நலனுக்கு எதிரானது என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். 


இந்நிலையில், விளையாட்டுத் திடல் தனியார் மையம் செய்வதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


 மாணவ மாணவியர்களின் கோரிக்கையினை ஏற்று சென்னை உள்ள 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்கள் கட்டணமின்றி பயன்படுத்தலாம் என இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா எக்ஸ் தளத்தில் பதிவில் தெரிவித்துள்ளார்.