இதுதொடர்பாக சென்னை மாநகாராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “சென்னையில் தனியார் ஹோட்டல்கள், மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம். இதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என அவசியம் இல்லை. ஆனால், தகவல் தெரிவித்து கொரோனா மையத்தை தொடங்கலாம். மாநகராட்சி அலுவலக அதிகாரிக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு சிகிச்சை மையத்தை தொடங்கலாம் என்று கூறினார்.
முன்னதாக, சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்தது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் சென்னை மாநகர நலச்சங்கம் மற்றும் ரிப்பன் மாளிகையில் நேர்காணல் நடைபெறும் என்றும் கூறியது.

Here's the Info Graphic summary and Overall zone-wise status of Covid-19 cases in Chennai. #Covid19Chennai #GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/PTZoiQa4pS
— Greater Chennai Corporation (@chennaicorp) April 28, 2021

சென்னையில் நேற்று மட்டும் 4 ஆயிரத்து 640 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்து 36ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிப்பு அதிகரித்தால் அதை சமாளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.