சென்னை விமான நிலையத்துக்கு, துபாயிலிருந்து வரும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சொந்தமான விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தது.


இதையடுத்து, உளவுத்துறை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், துபாயிலிருந்து வந்த ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சொந்தமான EK-544 என்ற விமானத்தில், வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


பயணிகளிடம் சோதனை:


அப்போது, சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய மூன்று ஆண் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனையில், மூன்று பேரும் கால்சட்டை பாக்கெட்டுகளில் 240 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும், அவர்களின் உடமைகளை சோதித்தபோது, மூவரும் Apple Airpods Pro-வில் 22 தங்கக் கட்டிகள் வீதம் மொத்தம் 66 தங்கக் கட்டிகள் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதையடுத்து, அவர்களிடமிருந்த தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.14 லட்சம் மதிப்பிலான மின்னணு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


2.485 கிலோ தங்கம் பறிமுதல்:


அவர்களிடமிருந்து ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.485 கிலோ எடையிலான 24 கேரட் தங்கக் கட்டிகளும் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்புடைய பல்வேறு மின்னணு பொருட்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டது.


இதுகுறித்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் எம்.மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.485 கிலோ எடையிலான 24 கேரட் தங்கக் கட்டிகளும், ரூ.14 லட்சம் மதிப்புடைய பல்வேறு மின்னணு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.


இதற்கு முன்பு, கடந்த வாரத்தில் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2.94 கோடி ரூபாய் மதிப்பிலான 5.6 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கோவை சிட்ரா பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்,  தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. 


Also Read: பரபரப்பு.. கோவை விமான நிலையத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் ; இருவர் கைது.. என்ன நடந்தது?