சென்னையில் இன்று முதல் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. விலை உயர்வு காரணமாக தக்காளி வாங்க பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனை தடுக்கும் நோக்கில் முதற்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளில் விற்பனை செய்யப்படுகிறது. 


அதன்படி, வடசென்னையில் 32, மத்திய சென்னை மற்றும் தென்சென்னையில் தலா 23 என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. 


முன்னதாக, தக்காளி விலை உயர்வானது பொதுமக்களை பாதிக்காத வகையில், பண்ணை பசுமை கடைகளில் விற்கப்படுவது போன்று ரேஷன் கடைகளிலும் ஒரு கிலோ தக்காளி ரூ. 60 க்கு விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். அப்போது அவர், “ 29 பண்ணை பசுமை கடைகள், சென்னையில் 82 ரேஷன் கடைகள் என மொத்தம் 111 கடைகளில் ரூ. 60 க்கு தக்காளி விற்பனை செய்யப்படும்.” என தெரிவித்திருந்தார். 


இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை : 


இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 10 ஆக உயர்ந்துள்ளது. தக்காளி விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் ரூ. 10 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக, சில்லறை வணிக கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 120 முதல் ரூ. 130 வரை விற்பனை செய்யப்படுகிறது. 


மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதன் தாக்கத்தால் நாடு முடுவதும் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர தொடங்கி, ஒரு கிலோ 100 ரூயாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இந்த திடீர் விலை ஏற்றதால் அன்றாட பொதுமக்கள் தக்காளி இன்றி சமைக்க தொடங்கிவிட்டனர். தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தக்காளி விலை குறைப்புக்கு தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. 


இன்று முதல் ரேஷன் கடை உள்பட 111 கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மற்ற மாவட்டங்களில் இதேபோல் விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.