மோசடி வழக்கில் 4  ஆண்டுகளாக தஞ்சாவூர், ஹைதராபாத் போலீசால்  தேடப்பட்டு வந்த ,தெலுங்கானா மாநில தொழிலதிபர், கத்தார் நாட்டுக்கு விமானத்தில் தப்பிச்செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 

 

தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீஸ் 

 


சென்னை ( Chennai News ) : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சேர்ந்தவர் காஜா மொய்தீன் (55). தொழிலதிபராண இவர் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், தொழில் நடத்தி வந்தார். இந்த நிலையில் காஜா மொய்தீன் மீது மோசடி வழக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு, ஹைதராபாத் மற்றும் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் பதிவாகியது. இதை அடுத்து ஹைதராபாத் மற்றும் தஞ்சாவூர் போலீசார் காஜா மொய்தினை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக தேடி வந்தனர். ஆனால் காஜா மொய்தீன் கடந்த 4  ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இதை அடுத்து தஞ்சாவூர் மற்றும் ஹைதராபாத் போலீசார், காஜா மொய்தினை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல் ஓ சி போடப்பட்டிருந்தது.

 

சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள்

 

இந்த நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, கத்தார் நாட்டு தலைநகர் தோகா செல்லும், கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் ஆய்வு செய்து, பயணிகளை  விமானத்தில் ஏற அனுமதித்துக் கொண்டு இருந்தனர்.

 

ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீசார் 

 

அப்போது தஞ்சாவூர் மற்றும் ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீசாரால், தேடப்பட்டு வரும் தொழில் அதிபர் காஜா மொய்தீன், இந்த விமானத்தில் கத்தார் நாட்டுக்கு தப்பி செல்வதற்காக வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, இவர் கடந்த 4  ஆண்டுகளாக தலைமறைவு குற்றவாளி. இவரை தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர் என்று தெரிய வந்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் காஜா மொய்தீன் பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரை வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்து, தொழிலதிபர் காஜா மொய்தீனை அடைத்து வைத்துள்ள அறைக்கு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை அதிகாரிகள், தஞ்சாவூர், ஹைதராபாத் போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர