செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை திருப்போரூர், ஆலத்தூர், திருக்கழுக்குன்றம் மற்றும் அஞ்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்தடை
திருப்போரூர் மற்றும் ஆலத்துார் துணை மின் யால் எங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சாரத் துறை அறிவித்துள்ளது.
எந்தெந்த பகுதியில் நாளை மின்தடை ?
திருப்போரூர், அனுமந்தபுரம், காலவாக்கம், தண்டலம், செங்காடு, கொட்டமேடு, சென்னேரி, திருவடிசூலம், இள்ளலுார், செம்பாக்கம், கரும்பாக்கம், முள்ளிப்பாக்கம், மடையத்துார், தையூர் ஒரு பகுதி மட்டும், விஜயசாந்தி குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆலத்துார், ஆலத்துார் சிட்கோ, பூஞ்சேரி, கூத்தவாக்கம்சாவடி, கடம்பாடி, வடகடம்பாடி, பட்டிபுலம், தண்டலம், கருங்குழிபள்ளம், பண்டிதமேடு, பையனுார், இளந்தோப்பு, சாலவான்குப்பம், தேவனேரி, மாமல்லபுரம் ஒரு பகுதி மட்டும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சூர் துணை மின் நிலையம்
அஞ்சூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளதாக மின்சாரத்துறை அறிவித்துள்ளது.
எந்தெந்த பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது ?
அஞ்சூர், மகேந்திரா சிட்டி தொழில் வளாகம், அமணம்பாக்கம், தேனுார், பட்டரைவாக்கம், எலந்தோப்பு, குன்னவாக்கம், ஈச்சங்கரணை, தெற்குப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
திருக்கழுக்குன்றத்தில் நாளை மின்தடை
திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள பகுதிகள்
திருக்கழுக்குன்றம், முத்திகைநல்லான்குப்பம், விட்டிலாபுரம், நெய்குப்பி, அமிஞ்சிகரை, வீராபுரம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், நெரும்பூர், வாயலுார், ஆயப்பாக்கம், பாண்டூர், விளாகம், வல்லிபுரம், ஆனுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.