தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1608- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10:30-மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் டெக்னிக்கல் பிரச்சனையால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்னிக்கல் பிரச்சினை என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்துள்ளார்