Rain Alert :தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... உங்கள் மாவட்டத்தின் நிலை?

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கிரிஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Continues below advertisement

”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,   

09.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

10.08.2023 மற்றும் 11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை : 

09.08.2023 மற்றும் 10.08.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி) 7, சித்தம்பட்டி (மதுரை) 6, தனிமங்கலம் (மதுரை), கும்பகோணம் (தஞ்சாவூர்), காட்டுமயிலூர் (கடலூர்), மேலூர் (மதுரை), மேட்டுப்பட்டி (மதுரை), தல்லாகுளம் (மதுரை),), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 5, கமுதி (ராமநாதபுரம்), கிழாநிலை (புதுக்கோட்டை), சிங்கம்புணரி (சிவகங்கை), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), வம்பன் KVK AWS ( புதுக்கோட்டை), திருப்பத்தூர் (சிவகங்கை), காரைக்குடி (சிவகங்கை) தலா 4, தேவகோட்டை (சிவகங்கை), மதுரை தெற்கு, பார்வூட் (நீலகிரி), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருமயம் (புதுக்கோட்டை), கல்லிக்குடி (மதுரை) , மஞ்சளாறு (தஞ்சாவூர்), சத்தியார் (மதுரை), தொண்டி (ராமநாதபுரம்), இடையபட்டி (மதுரை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஏற்காடு (சேலம்) தலா 3,  காஞ்சிபுரம், கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி), காரையூர் (புதுக்கோட்டை), வந்தவாசி (திருவண்ணாமலை), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), அரிமளம் (புதுக்கோட்டை), விரகனூர் அணை (மதுரை), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), அன்னவாசல் (புதுக்கோட்டை), திருவாடானை (இராமநாதபுரம்), புலிப்பட்டி (மதுரை), சின்னக்கள்ளார் (கோயம்புத்தூர்) தலா 2,  அவலாஞ்சி (நீலகிரி), செய்யாறு (திருவண்ணாமலை), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), தலைவாசல் (சேலம்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), செங்கல்பட்டு, விருகாவூர் (கள்ளக்குறிச்சி), குடிமியான்மலை (புதுக்கோட்டை), குப்பணம்பட்டி (மதுரை), கள்ளக்குறிச்சி, எறையூர் (கள்ளக்குறிச்சி), ஹரிசன் மலையாளம் லிமிடெட் (நீலகிரி), விருத்தாசலம் KVK AWS (கடலூர்), வடகுத்து (கடலூர்), விருதுநகர் AWS  (விருதுநகர்), குப்பநத்தம் கடலூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தொழுதூர் (கடலூர்), சுத்தமல்லி அணை (அரியலூர்), விருதுநகர்  தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 

09.08.2023 மற்றும் 10.08.2023: `தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola