சென்னை டூ ராமநாதபுரம் இடையே விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 


புண்ணிய ஸ்தலங்களில் பழமையும் புகழும் வாய்ந்தது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில். நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் 11 வடக்கே அமைந்துள்ளது. தெற்கே ராமேஸ்வரம் மட்டுமே. 126.5 அடி உயரமுடைய ராஜகோபுரம், 76 அடி உயர மேற்கு கோபுரத்துடன் உலக பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் ஆகியவற்றுடன் விளங்கும் இக்கோயில் 300 ஆண்டுகளுக்கு முந்தையது. ராமேஸ்வரம் பகுதி மிகவும் புண்ணிய தலமாக கருதப்படுவதால் இங்கு வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.


இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு மக்கள் எண்ணிக்கை வரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு விமான சேவை தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 


இந்தநிலையில், ராமநாதபுரத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமான தளத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான தொடங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா தெரிவித்துள்ளார். 


மக்களவையில் இன்று எம்பி நவாஸ் கனி, சென்னை டூ ராமநாதபுரம் விமான சேவை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை, ”இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் அல்லது விமான நிலையம் தயாராகி 2 மாதங்களில் விமானம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.






மத்திய பட்ஜெட்:


2023-24 மத்திய பட்ஜெட்டில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கான ஒதுக்கீடு பாதியாக குறைக்கப்பட்டு ரூ. 3,113.36 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று, நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராந்திய வான்வழி இணைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், கூடுதலாக 50 விமான நிலையங்கள் கட்டப்படுகின்றன. அத்துடன், ஹெலிகாப்டர் தளங்கள், நீர்வழி விமான நிலையங்கள், நவீன தரை இறங்கும் மைதானங்கள் ஆகியவையும் அமைக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.