சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு உத்தரவின் அடிப்படையில், யானைகள்  வேட்டையாடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று வழக்குகளை சிபிஐ விசராணைக்கு எடுத்துக் கொண்டது.


ஜனவரி 5, 2021 அன்று  கோவை மாவட்டத்தில் உள்ள பொலுவம்பட்டி வனப்பகுதியில் யானை உயிரிழந்த வழக்கு, டிசம்பர் 19, 2020 அன்று கோசனூர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் வேட்டையாடியதாக சந்தேகிக்கப்படும் வழக்கு, 2014 முதல் உடுமலை வனப்பகுதியில் யானைகள் வேட்டையாடியதாக சந்தேகிக்கப்படும் வழக்கு ஆகிய மூன்று வழக்குகளை சிபிஐ அமைப்பு விசாரிக்க  உள்ளது.   


தமிழகத்தில் தந்தங்களுக்காக யானைகள்  வேட்டையாடப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ் குமார், யானை தந்த கலைப்பொருட்களை நாடு முழுவதும் உள்ள செல்வந்தவர்களுக்கு விற்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். தமிழகத்தில் யானைகள் இறப்புகளை தன்னிச்சை நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது,  இந்த சம்பவங்களுக்கு பின் பெரிய சதிவேலைகள்  இருப்பதாகவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.