CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பை  உடனடியாக நடத்த, ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.


சாதிவாரி கணக்கெடுப்பு தனி தீர்மானம்:


தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், “சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது.  ஒன்றிய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும்.


விதிகளின்படி சாதிவார் கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. மக்கள் தொகை, சாதி வாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது.  2021 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கொரோனா உள்ளிட்ட காரணங்களை காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தவில்லை. சம வாய்ப்பு, கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் அவசியமாக இருக்கிறது. ” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.