சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் பேராசிரியர் இளங்கோவன் கூறுகையில், ”பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் தன் சாதி மக்களை மட்டும் வைத்துக்கொண்டு பிற சாதி மக்களை ஆசிரியர்களை பழிவாங்கும் இந்தப் பல்கலைக்கழகத்தின் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு சட்டத்திட்டமே கிடையாது. பல்கலைக்கழக சட்டம் இருந்தாலும், அதற்கான விதிகள் இருந்தாலும் சட்டப்படி நடப்பது பதிபோளர், பொறுப்பு பதிவாளர் இல்லை. இந்த பல்கலைக்கழகத்தில் நிரந்தர பதிவாளர் கிடையாது, நிரந்தர தேர்வு அலுவலர் கிடையாது. பணியாளர்கள் சங்கம் வைத்தால் சங்கத்தின் பொறுப்பாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்காக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த சங்கத் தலைவரை நான்கு ஆண்டுகள் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்” என்று கூறினார்.



தொடர்ந்து பேசிய அவர், “இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி நல்லதம்பியை நியமித்தார்கள். நல்லதம்பி தொழிலாளர்களை குற்றமற்றவர்கள் எனக் கூறியுள்ளார். ஆனால் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் சேர்ந்து நான்கு பேரையும் நிரந்தர பணி நீக்கம் செய்துள்ளனர். அமைச்சர் பொன்முடி எங்களுடன் குடியாத்தம் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். தற்போது அவர் கல்வி அமைச்சர் ஆக உள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்த தனி கமிட்டி அமைத்துள்ளார். துணைவேந்தர் மற்றும் பொறுப்பு பதிவாளரை பணி நீக்கம் செய்தால்தான் முறையான விசாரணை நடத்தப்பட முடியும். அப்போதுதான் பணியாளர்கள் அச்சமின்றி தங்களது கருத்துக்களையும், ஊழல் கலையம் தெரிவிப்பார்கள். துணைவேந்தர் ஜெகநாதன் தனது சொந்த தேவைக்காக, கல்லூரி பணத்தில் ஒரு நெட்வொர்க்கை நடத்துகிறார். இதனை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தான் கேட்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி ஊழல் செய்பவர்களை கண்டிப்போம்” என கூறியுள்ளனர்.



மேலும், “ மாணவர்களுக்கு டிசியில் "not satisfied" என்று குறிப்பிட்டு வழங்கியுள்ளனர். அதனை வழங்கிய வரலாறுத்துறை தலைவர், காமர்ஸ் டிபார்ட்மென்ட் சேர்ந்தவர். அவர் எப்படி வரலாறுத்துறை நான் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும் உடனடியாக தமிழக அரசு இதற்கு ஒரு கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார். அமைச்சர் பொன்முடி இதில் நேரடியாக தலையிட வேண்டும். தமிழக முதல்வருக்கு சங்கத்தின் சார்பாக பல ஊழல் புகார்கள் கொடுத்துள்ளோம். அதனை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி ஊழல் நிறைந்த பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை எடுத்த வேண்டும். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளாக பதிவாளர் இல்லை.


இதேபோன்று பெரியார் பல்கலைக்கழகத்திலும் நிரந்தர பதிவாளர் இல்லை. எது தொடர்பாக மாணவர்கள் கேள்வி எழுப்பினார் அவர்களது மாற்று சான்றுகளில் கைவைத்து விடுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல உறவு இருக்கக்கூடாது. தொழிலாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல உறவு இருக்கக் கூடாது. இவர்கள் நடத்தும் ஊழல் குறித்து பேசாமல் இருக்க அனைவரையும் பிரித்து வைக்கின்றனர். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல் குறித்து விசாரணை மொத்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றார்.


 


பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அரசியல் ரீதியாக மத்திய அரசின் பலம் இருக்கிறது நான் சொல்லிக் கொண்டு இங்குள்ள அமைச்சர்களை மதிப்பதில்லை. பெரியார் பல்கலைக்கழகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சாதி மட்டும்தான் காரணம். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முக்கிய பேராசிரியர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். இதனால் தங்கள் சாதி ஆட்கள் தான் இங்கு இருக்க வேண்டும், பிற சாதி ஆட்களுக்கு இடம் இல்லை, அவர்களை பழி வாங்குவோம். நீங்கள் எல்லாம் கொத்தடிமை என்று கூறியுள்ளார். தந்தை பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களில் வன்மம். ஒரு குறிப்பிட்ட சாதியினரின் மேலாதிக்கும். வேறு சாதி ஆட்களை பழிவாங்குகின்றனர். பல்கலைக்கழகத்தில் உள்ள துறை தலைவர்கள் பெரும் ஊழல் போராளிகள் என்று கூறினார்.