அரியலூர் மாணவி தற்கொலை; மதமாற்ற முயற்சி என்பதை ஏற்க முடியாது - பீட்டர் அல்போன்ஸ்

பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் நிறையே பேர் இந்துக்களாக இருக்கின்றனர். பெற்றோர் - ஆசியர் சங்கத்தின் தலைவர் கூட இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

Continues below advertisement

அரியலூர் மாணவி பயின்ற பள்ளியில் 80 சதவீதம் மாணவிகள் இந்துக்களாக இருக்கும் நிலையில், மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியாக கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

Continues below advertisement

இதுதொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதை கட்டாயமாக விசாரிக்கப்பட வேண்டும். அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் எனக்கு கிடையாது. இந்த சமூகத்தில் உள்ளவர்கள் அனைவரும் மாணவியில் தற்கொலைக்கு கவலைப்பட வேண்டும். மாணவியின் தற்கொலைக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பான எடுக்கப்படும் நடவடிக்கைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மேலும் படிக்க: மதம் மாறச்சொன்னதால் மாணவி தற்கொலையா? - போலீஸ் தங்களை மிரட்டுவதாக பெற்றோர் நீதிமன்றத்தில் புகார்

மாணவியின் தற்கொலை தொடர்பான முழுமையான வீடியோக்கள் வெளியே வர வேண்டும். வீடியோவில் மதமாற்றம் என்று கூற்று இல்லை என்றால் அதற்கான  முழு பொறுப்பை அண்ணாமலை ஏற்க வேண்டும். தமிழ்நாடு மக்களுக்கு பதில் கூற வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அந்தப் பள்ளியில் சுமார் 1000 பேர் படிக்கின்றனர். அதில் 80% பேர் இந்துக்கள். பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் நிறையே பேர் இந்துக்களாக இருக்கின்றனர். பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கூட இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதுபோன்ற சூழ்நிலையில் மதமாற்றம் என்று கூறினால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று கூறினார்.


முன்னதாக, அரியலூர் மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக எம்எல்ஏவும், பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசான் கூறியுள்ளார். மேலும், மாணவி மரணம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளி மாணவி தற்கொலை குறித்து நேரில் விசாரணை நடத்த மத்திய பிரதேச எம்பி சந்தியா ராய் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவை தேசிய பாஜக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement