கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 9,139 கனஅடி தண்ணீர் வந்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 9,088 கன அடி யாக குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் டெல்டா பாசன பகுதிக்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.




 


அமராவதி அணை:


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை வினாடிக்கு 118 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து 79 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு 220 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 64. 60 அடியாக இருந்தது.


 




 


நங்காஞ்சி அணை நிலவரம்:


திண்டுக்கல் மாவட்டம், வடககாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 28.65 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


 




 


ஆத்துப்பாளையம் அணை:


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை, 6 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை.26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 11.64 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.