Breaking News Tamil LIVE: எந்த வன்முறைக்கும் சார்பாக பேசவில்லை - சாய் பல்லவி

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 18 Jun 2022 09:20 PM
Sai Pallavi Clarification : எந்த வன்முறைக்கும் சார்பாக பேசவில்லை - சாய் பல்லவி

சாய் பல்லவி தற்போது இன்ஸ்டாகிராம் வழியாக அளித்திருக்கும் விளக்கத்தில், “நான் பேசியது முழுவதுமாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பலரும் அந்த வீடியோவை முழுவதுமாக கேட்கக்கூட இல்லை. அவரவர்களுக்கு ஏற்ற வகையில் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எல்லா வகையான வன்முறைகளையும் நான் அதில் கண்டித்திருக்கிறேன். மருத்துவம் படித்த பட்டதாரியான எனக்கு, எந்தவிதமான வன்முறையும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.





ஜாதி, மதம், பண்பாடு என எந்த வகையிலும் வேற்றுமையும், பாகுபாடும் காட்டாத பின்புலத்தில் நான் வளர்ந்தேன். சில நாட்களாக என்னை சுற்றி எழுந்த விவாதங்கள், என்னை பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. நான் சொன்னவற்றில் இருந்து பின்வாங்கவில்லை. எந்த வன்முறைக்கும் சார்பாக பேசவில்லை. வலதுசாரியா, இடதுசாரியா என கேட்கப்பட்ட கேள்விக்கு, நல்ல மனிதனாக இருப்பதே தீர்வு எனவே தெரிவித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.



TN Corona Update : தமிழ்நாட்டில் இன்று 600-ஐ நெருங்கியது கொரோனா தொற்று எண்ணிக்கை..

Agniveer Defence Jobs : Agniveer Defence Jobs : பாதுகாப்பு அமைச்சக பணிகளில், தகுதியுள்ள அக்னிவீரர்களுக்கு 10% வாய்ப்பு : அறிவித்த மத்திய அரசு

Agniveer Defence Jobs : பாதுகாப்பு அமைச்சக பணிகளில், தகுதியுள்ள அக்னிவீரர்களுக்கு 10% வாய்ப்பு : அறிவித்த மத்திய அரசு





எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு..!

முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

Meta Clothing Store : மனிதர்களை போல டிஜிட்டல் மாடல் அவதார்களை உருவாக்கி, வாங்கும் வகையில் டிஜிட்டல் துணிக்கடையை அறிமுகப்படுத்தியது Meta

மனிதர்களை போல டிஜிட்டல் மாடல் அவதார்களை உருவாக்கி, வாங்கும் வகையில் டிஜிட்டல் துணிக்கடையை அறிமுகப்படுத்தியது Meta 

Agnipath Protests : அக்னிபத் போராட்டங்கள் : ஜூன் மாதம் 19-ஆம் தேதி வரையில் பீஹாரின் 12 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு..

Agnipath Protests : அக்னிபத் போராட்டங்கள் : ஜூன் மாதம் 19-ஆம் தேதி வரையில் பீஹாரின் 12 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு..

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவு

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எடப்பாடி பழனிசாமிக்கு 60க்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு!

எடப்பாடி பழனிசாமிக்கு 60க்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. 

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- மு.க.ஸ்டாலின் உறுதி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விடமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். காவிரியின் உரிமையைக் காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேகதாது அணை குறித்து காவிர் அணையத்தில் விவாதிப்பது தவறு என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

கொடுங்கையூர் விசாரணை கைதி மரணம் - 30 போலீசார் விசாரணைக்கு ஆஜர்

கொடுங்கையூர் விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்தது தொடர்பாக 30 போலீசார் விசாரணைக்கு ஆஜர். 

சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் டோக்கன்..!

சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்க்கான டோக்கன் ஜுன் 21 முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை..!

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சற்று நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் குருத்வாராவில் குண்வெடிப்பு தாக்குதல்- ஒருவர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள  குருத்வாராவில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய சுப்பாகிச்சூடு தாக்குதலில் பாதுகாவலர் அகமது உயிரிழ்ந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.துப்பாக்கிச் சூடு தொடரும் நிலையில் மேலும், எட்டு பேர் குருத்வாராவில் சிக்கியுள்ளதாக தகவல்.

பழனிசாமியுடன் செல்லூர் ராஜூ சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியுடன் செல்லூர் ராஜூ சந்திப்பு; சென்னையில் உள்ள பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இளைஞர்கள் போராட்டம்

அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தலைமைச் செயலகம் அருகிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அக்னிபத் திட்டத்தின்கீழ் சேரும் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10 சதவீதம் ஒதுக்கீடு

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்பவர்களுக்கு மத்திய ஆயுதப்படை  மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10 சதவீதம் ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தனது தாயாரிடம் ஆசி பெற்றார்..!

 குஜராத் மாநிலம் காந்தி நகரில் தமது தாய் ஹீராபென்னின் 100 வது பிறந்தநாளையொட்டி நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் ஒருங்கிணைப்பாளர் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்

உலகளவில் 54.36 கோடி பேருக்கு கொரோனா..!

உலகில் 54.36 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 63.39 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 51.86 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 

28 நாளாக விலை மாற்றமின்றி விற்கப்படும் பெட்ரோல்..!

சென்னையில் 28ஆவது நாளாக விலை மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Background

பாதுகாப்பு படைகளின் ஆட் சேர்ப்பு திட்டமான அக்னிபாத் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நாளே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. தங்களை அரசு முட்டாள்களாக்குவதாக இளைஞர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர். 


அக்னிபாத்


பீகாரில் உள்ள முஸாபர்பூர் மற்றும் பக்சரில் புதன்கிழமையன்று போராட்டம் வெடித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.


நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, சேர்க்கப்பட்டவர்களில், 25 சதவிகித ராணுவ வீரர்கள் மட்டுமே 15 பதவி காலத்தில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள், 11 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகையுடன் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களுக்கு, எந்த விதமான ஓய்வூதியமும் வழங்கப்படாது.


அக்னிவீர் திட்டத்தில் சேருபவர்களுக்கு ராணுவம் 12 முதல் 10 ஆம் வகுப்பு சான்றிதழ்கள் வரை வழங்க முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. இந்த புதிய திட்டத்திற்கு மூத்த ராணுவ வீரர்கள் உள்பட பல்வேறு முனைகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது வீரர்கள் மத்தியில் போராடும் குணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் துணிந்து செயல்படுவதை தடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 


இதுகுறித்து பிகாரை சேர்ந்த குல்சான் குமார் பேசுகையில், "வெறும் நான்கு ஆண்டுகள் பணி என்பதன் பொருள், அதன் பிறகு வேறு வேலைகளுக்கு செல்ல படிக்க வேண்டும். எங்களுடைய வயதில் இருப்பவர்களை விட நாங்கள் பின்தங்கியவர்களாக இருப்போம்" என்றார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்ய போகிறோம் என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 


ராணுவத்தில் சேர விரும்பு அதற்கு தயாராகி வரும் சிவம் குமார் இதுகுறித்து கூறுகையில், "இரண்டு வருடங்களாக ஓடி ஓடி என்னை உடல் ரீதியாக தயார்படுத்தி வருகிறேன். நான்கு வருடங்கள் மட்டுமே இருக்கும் வேலையை நான் எடுக்க வேண்டுமா?" என்றார்.


அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ராணுவ திட்டம், அளிக்க வேண்டிய ஊதியத்தையும் ஓய்வூதியத்தையும் பெரிய அளவு குறைக்கவுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பணத்தை கொண்டு ஆயுதங்களை வாங்க திட்டம் வழிவகை செய்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.