Breaking News Tamil LIVE: அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்- கே.பி.முனுசாமி

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 20 Jun 2022 07:01 PM
சென்னையில் பரவலாக மழை!

சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம், கோயம்பேடு, மதுரவாயல், ஆயிரம் விளக்கு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் பரவலாக மழை

சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம், கோயம்பேடு, மதுரவாயல், ஆயிரம் விளக்கு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்- கே.பி.முனுசாமி

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி கூட்டம்  நடைபெறும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க, ஓபிஎஸ் வலியுறுத்திய நிலையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்- கே.பி.முனுசாமி

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி கூட்டம்  நடைபெறும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க, ஓபிஎஸ் வலியுறுத்திய நிலையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் - இபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி, வரும் 23ஆம் தேதி நடைபெறும் எனவும், கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது

பொறியியல் கல்லூரி படிப்புகளில் பி.இ, பி.டெக் படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜீலை 19 வரை விண்ணப்பிக்கலாம்.

ஓபிஎஸ் சமாதானத்தை விரும்புபவர், ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொள்வார்- ஓ.எஸ்.மணியன்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சமாதானத்தை விரும்புபவர், ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொள்வார் என அதிமுக மூத்த தலைவர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்

சிறுவாணி அணை விவகாரம்: கேரள முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அணையில் நீர் சேமிப்பை பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் பினராயி விஜயனுக்கு கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு காரணமாக 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை உள்பட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினால் சந்திக்கத் தயார் : இபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து தீர்மானம் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினால், சந்திக்க தயார் என இபிஎஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் குடும்பதகராறு காரணமாக அண்ணனை தம்பி கடப்பாரையால் தாக்கி கொலை!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு  பனங்காட்டு தெருவை சேர்ந்த குமார்(44)மற்றும் அவரது தம்பி வீராச்சாமி(41) இருவருக்குமிடையே  முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மதுபோதையில் இருந்த தம்பி வீராச்சாமி தனது அண்ணன் குமாரை கடப்பாறையால் தாக்கியதில் உயிரிழந்தார். இறந்த குமாரின் மனைவி ராதிகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து வீராசாமியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நன்னிலம் அருகே இளைஞர் வெட்டி படுகொலை...! பழிக்கு பழி வாங்கும் சம்பவமா என காவல்துறையினர் விசாரணை

திருவாரூர் மாவட்டம் மணவாளநல்லூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் 28 வயதான சந்தோஷ் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் சந்தோஷை தலையில் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 


இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சந்தோஷ் சேர்க்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இபிஎஸ் உடன் ஓபிஎஸ் இன்று சந்திப்பு..?

இபிஎஸ் உடன் ஓபிஎஸ் இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஓபிஎஸ் வீட்டிற்கு தம்பிதுரை வருகை..!

எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய நிலையில், ஓபிஎஸ் வீட்டிற்கு தம்பிதுரை வருகை.

கைதி ராஜசேகரன் மரணம் - 30 காவலர்களிடம் விசாரணை

சென்னையில் விசாரணை கைதி மரணம் தொடர்பாக 30 காவலர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொரோனா அறிகுறி இருந்தால் விவரம் தர உத்தரவு..!

சென்னையில் கொரோனா அறிகுறி இருந்தால் உள்ள நபர்களின் விவரங்களை தனியார் மருத்துவமனைகள் அளிக்க சென்னை மாநகராட்சி உத்தரவு 

அக்னிபத் போராட்டம் : சென்னையில் பலத்த பாதுகாப்பு

அக்னிபத் போராட்டம் எதிரொலி காரணமாக சென்னை தலைமை செயலகம் அருகே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

அக்னிபத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை - ப.சிதம்பரம்

அக்னிபத் என்னும் மத்திய அரசின் கொள்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அது விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 15 பேர் பலி..!

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 15 பேர் பலியாகி உள்ளனர். 

13 ஆயிரத்தை நெருங்கியது இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ..!

இந்தியாவில் ஒருநாளில் கொரோனா தொற்றால் 12,899 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

உலகம் கொரோனா எண்ணிக்கை விவரம்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 544,040,043 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 519,211,295 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 40,199 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Background

இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. 


அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள் எனவும் இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


அக்னி பாதை திட்டம்: ஒரு பார்வை


இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவீதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 









17.5 வயது முதல் 23 வயது வரையிலான ஆண்களும் பெண்களும் அக்னி பாதை திட்டத்தில் சேரலாம். ஏற்கெனவே உள்ள கல்வித் தகுதி, உடல் தகுதி நடைமுறைகள் பின்பற்றப்படும். 


அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.  


என்ன ஊதியம்?


முதல் ஆண்டு ஊதியம் பிடித்தம் போக கைக்கு கிடைப்பது பிடித்தம் அரசு செலுத்துவது
முதல் ஆண்டில் சம்பளமாக ரூ.30,000 (பிடித்தம் போக ரூ.21,000), 2 ஆம் ஆண்டில் ரூ.33 ஆயிரம் (பிடித்தம் போக ரூ.23,100), 3 ஆம் ஆண்டில் ரூ.36,500 (பிடித்தம் போக ரூ.25,580), 4 ஆம் ஆண்டில் ரூ.40,000 (பிடித்தம் போக ரூ.28,000) வழங்கப்படும். பிடித்தம் செய்யப்படும் ரூ.5.02 லட்சம் சேவா நிதிக்கு செல்லும். அதே அளவு நிதியை  மத்திய அரசும் செலுத்தும். இதன்மூலம் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் பயிற்சி பெறுபவர்களுக்கு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


பிற பயன்கள்
பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். பணியின்போது மரணமடைந்தால் ரூ.44 லட்சம் வழங்கப்பட உள்ளது.


மத்திய அரசு என்ன சொல்கிறது?


அக்னிபத் ஆள்சேர்ப்புக் கொள்கையின் முக்கிய நோக்கம், இந்திய ராணுவத்தில் அதிகரித்து வரும் ஊழியர்களுக்கான ஊதியத்தையும், ஓய்வுதியச் செலவுகளையும் குறைப்பதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


இதுகுறித்து, அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்களின் துடிப்பும், திறமையும் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தகுதி அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதன்மூலம் தகுதி உள்ளோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்தகைய திட்டம் பல்வேறு உலக நாடுகளில் உள்ளதுதான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல், சீனா, அமெரிக்கா, ஃப்ரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் ராணுவ மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு, அக்னிபத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.