Breaking LIVE | உலகின் 30 நாடுகளில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை!
அண்மையில் வெங்கடாசலம் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த செப்டம்பரில் இவருக்கு சொந்தமான வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்
தனிமனித விருப்பு, வெறுப்புகளுக்கு அதிமுக பயன்பட்டதோ அன்றிலிருந்து அதன் மதிப்பு குறைந்தது
விரைவில் அதிமுகவின் நிலை மாறும், தலை நிமிறும், இது உறுதி - சசிகலா
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யலாம்
மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் டிச.4ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம்
இந்தியாவிலேயே மதுவுக்கு தடை விதித்தாலும் வெளிநாடு சென்று மதுவாங்கவும் தயாராகவே உள்ளனர்
அரசை மட்டும் குறை கூற கூடாது ஒவ்வொருவருக்கும் பொறுப்பு தேவை - உயர்நீதிமன்ற மதுரை கிளை
போலி மதுபான விற்பனையை தடுக்க மதுக்கடையை திறப்பதாக கூறும் அரசால், கஞ்சாவையும் சட்டரீதியாக விற்கமுடியுமா?
உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு சரமாரி கேள்வி
அதிமுகவுக்கு இரட்டை தலைமையே சிறந்தது; கண்ணும் இமையும் போல இரட்டை தலைமை சிறப்பாக உள்ளது
நகமும், சதையும் தனித்தனியாக செயல்பட வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள்
அதிமுகவிற்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம். சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது
ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலாவையும் அவருடைய குடும்பத்தை வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்தார்
- அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன்
டிச. 7 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்
டிச.3, 4 ஆகி தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்; டிச.5 வேட்புமனு பரிசீலனை, மனுவை திரும்பப் பெற டிச.6 கடைசி நாள்
அதிமுகவின் புதிய சட்ட விதிகளின் படி 5 ஆண்டுகள் ஆன அடிப்படை உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்
டிச.8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் - அதிமுக
மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 12 எம்.பி.க்கள் போராட்டம்
மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 12 எம்.பி.க்கள் போராட்டம்
Background
Breaking News LIVE In Tamil:
டிசம்பர் 4 ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஓரிரு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும், இந்த புயலானது கரையை கடந்த பின்னர், தமிழ்நாட்டில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -