Breaking Live: கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
கோவா மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க. அரசின் முதலமைச்சராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று விசாரணைக்கு ஆஜரான நிலையில் நாளையும் விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில் அவரிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிக்களை அகற்றுமாறு கூறவில்லை. தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியே - ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம்
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிக்களை அகற்றுமாறு கூறவில்லை. தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியே - ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம்
அண்ணா, எம்ஜிஆர் போல ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லலாம் என்று அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கார், வேலுமணி ஆகியோரிடம் கூறினேன் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சீனாவில் 133 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற விமானம் மலையில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதால் பரபரப்பு. பலர் உயிரிழந்திருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஓபிஎஸ் இடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மூலம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரம் தெரிந்து கொண்டேன் என தெரிவித்திருக்கிறார்
அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என்பதால் வானிமை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றபிறகு நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்னைகள், கொலை, கொள்ளை முதல் மதுரையில் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு எதிராக வன்முறையை தூண்டுவிதத்தில் பேசிய இஸ்லாமியர், ஏபிவிபி முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் கைது வரை ஆளுநரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா, எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் எனக்கு தெரியாது - ஓ.பன்னீர்செல்வம்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து தமிழ்நாடு பேரவையில் தனித் தீர்மானத்தை கொண்டுவந்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவியான இளவரசி ஆஜரானார்
இன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு இதுவரை ரூ.29 கோடி செலவிடப்பட்டுள்ளது - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதில்
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை அனைவரும் பார்க்கவேண்டும். மனிதத்தைத் தொடுவதாக அமைந்துள்ளது - அமீர்கான்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.
Background
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகிறார் ஓபிஎஸ், இளவரசியும் விளக்கம் அளிக்கிறார்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -