சென்னையில் இருந்து துபாய்க்கு இன்று காலை 7.35 மணிக்கு இண்டிகோ விமானம் ஒன்று 174 பயணிகளுடன் பயணம் செய்ய இருந்தது. அந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்த பிறகு அதில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த விமானம் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


அத்துடன் அந்த விமானத்தில் தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னை விமான நிலையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் தீவிரமாக சோதனையிட்டனா்.  விமானத்திலிருந்த 174 பயணிகளையும் சோதனையிட்டனா்.ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது.


இதை அடுத்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அது சென்னை மணலியில் உள்ள ஒரு நபர் பேசியது தெரிந்தது. இதை அடுத்து சென்னை மாநகர போலீஸ், அவரை சுத்தி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். 


அப்போது அவருடைய தங்கையும், தங்கை கணவரும் இன்று அந்த விமானத்தில் துபாய் செல்ல இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்குள் ஏதோ குடும்பப் பிரச்சனை இருப்பதால், அந்த பிரச்சனை காரணமாக இதை போல் வதந்தியை கிளப்பி விட்டார் என்று தெரியவந்தது. இதை அடுத்து அந்த மணலியைச் சேர்ந்த அந்த நபரை சென்னை மாநகர போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக துபாய் செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் தாமதமாக இன்று காலை 11 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க:செங்கல்பட்டு: நண்பரின் 8வயது மகளை வன்கொடுமை செய்த நபர்.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!




மங்களூரு இண்டிகோ விமானத்தில் நடந்த சம்பவம்:


கடந்த 16ஆம் தேதி மங்களூருவில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், ஒரு இளைஞர் அவருக்கு தெரிந்த பெண்ணிடம் மொபைலில் சாட் செய்து வந்துள்ளார். அப்போது விமானத்தில் இருந்த ஆணுக்கு அந்த பெண் தனது செல்போனில் இருந்து நீ ஒரு வெடிகுண்டு என்று வாட்சப்பில் அனுப்பிய மெசேஜ் அருகில் இருந்த பெண் பயணி தற்செயலாகப் படித்து தவறாகப் புரிந்து கொண்டு அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.


இதையடுத்து உடனடியாக, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு, விமானம் முழுவதும் ஏதேனும் நாசவேலை நடந்ததா என சோதிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விமானத்தில் இருந்த ஆண் பயணிக்கு, பெண் ஒருவர் நீ ஒரு வெடிகுண்டு என்று விளையாட்டாக சேட் செய்துள்ளார். இந்த சேட் அனைத்தையும் அருகிலிருந்து எதார்த்தமாக பார்த்து கொண்டிருந்த பெண் பயணி, வெடிகுண்டு என்றதும் பயத்தில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், புறப்பட இருந்த விமானம் நிறுத்தப்பட்டு அனைத்து பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. இதனால் 6 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு விமானம் மும்பை புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.