தமிழ்நாடு நிதியமைச்சர் பி..டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்ற மீது காலணி தாக்குதலை பா.ஜ.க. ஒருபோது நியாயப்படுத்தாது என்றும் வன்முறையில் நம்பிக்கை இல்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.அண்ணாமலை கூறியதாவது:


நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவம் விரும்பதகாதது. அதை ஒருபோதும் பா.ஜ.க. நியாப்படுத்தாது. ஆவேசத்தில் ஓரிருவர் செய்த தவறான செயல்களுக்கு ஒட்டுமொத்த பா.ஜ.க.வினரின் செயலாக கருதக் கூடாது. எங்கள் கட்சிக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. பா.ஜ.க. அனைவருக்குமானது. எந்த மதத்திற்கு எதிரானது அல்ல. தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். அதில் எங்களுக்கு மாற்று கருத்து ஏதுமில்லை. 


தொண்டர்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். நான் விமான நிலையத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பே வந்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருப்பேன். அமைதியை விரும்பும் கட்சியான பா.ஜ.க. இப்படி நடந்திருப்பது வருத்தமளிக்கிறது. தொண்டர்கள் உணர்ச்சிவசப் படக் கூடாது.


இவ்வாறு அவர் கூறினார்.






அமைச்சர் மீது தாக்குதல்:


தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று மதுரை விமான நிலையத்தில், ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது பாஜக-வினரும் கூட்டமாக வந்ததாக கூறப்படுகிறது.






அரசு சார்பில் முதலில் மரியாதை செலுத்திய பிறகு பாஜக-வினர் அஞ்சலி செலுத்துமாறு, அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர