கரூரில் பாஜக மாவட்ட பட்டியல் நிர்வாகி மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு கைது செய்தாக கூறி பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பாஜகவினர் 100க்கும் மேற்பட்ட கரூர் தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 


 




 


கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர், பாஜக மாவட்ட பட்டியலணி நிர்வாகியாக உள்ளார். அவரது சொந்த ஊரான வேட்டையார் பாளையத்தில் அதே சமூகத்தை சேர்ந்த சக்திவேல் என்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கரூர் சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் ரவி கைது செய்யப்பட்டு நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கண்டித்து அவரது ஊர் பொதுமக்கள் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் 


 


 




 


கரூர் சின்ன தாராபுரம் காவல்நிலையத்தில் அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி, அது தோல்வியில் முடிந்த நிலையில் கரூர் தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர். பாஜக நிர்வாகி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் உண்மையான குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில் மறியல் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. 


 


 


 




இந்நிலையில் கரூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்தன் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தி பொய் வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், புகார் கொடுத்த சக்திவேல் மீது வழக்கு போடப்படும் என்று கூறியதை இரண்டு மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது. 




 


இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் செந்தில்நாதன், “பட்டியல் மக்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு காவல்துறை உதவி செய்யாவிட்டால் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில் கரூர் மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும்” என்றார். மேலும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கும் மதுபான கடைகளை மூட வேண்டும் என்றார்.